Lok Sabha Election 2024: ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின், 2024 லோக்சபா தேர்தலுக்கு, பா.ஜ.க., தயாராகி வருகிறது. மூன்று மாநிலங்களில் கிடைத்த அமோக வெற்றியால் கட்சி உற்சாகமடைந்துள்ள நிலையில், அக்கட்சியின் வலுவான கோட்டையாக கருதப்படும் தொகுதிகளை கைப்பற்ற சிறப்பு பயிற்சிக்கான வரைபடத்தை தயார் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை தோற்கடிக்க அக்கட்சி விரும்புகிறது. பாஜக தேர்தல் கமிட்டியை பலப்படுத்தவும், லோக்சபா தேர்தலுக்கான திட்டமிடலில் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன் படுத்திக்கொள்வது? ஒவ்வோரு எம்.எல்.ஏ.க்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் முழு ஆயத்தத்துடன் தேர்தல் களத்தில் இறங்க பாஜக பக்கா திட்டமிட்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் முதல்வரின் பெயரை பாரதிய ஜனதா கட்சி (BJP) அறிவித்துள்ளது. மத்தியப் பிரதேச முதல்வராக மோகன் யாதவும், சத்தீஸ்கர் மாநில முதல்வராக விஷ்ணு தேவ் சாய்வும், ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக பஜன்லால் சர்மாவும் பதவியேற்கவுள்ளார். சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி கடந்த ஒரு வாரமாக மூன்று மாநிலங்களின் முதல்வர்கள் பெயரை அறிவிப்பதில் டெல்லி பாஜக தலைமை ஏன் இவ்வளவு நாட்கள் எடுத்துக்கொண்டது? அதற்கு பின்னால் உள்ள அரசியல் என்ன? பாஜகவுக்கு எதிராக இந்தியா கூட்டணியில் எதிர்கட்சிகள் இணைந்துள்ளதால், வரும் 2024 லோக்சபா தேர்தலை குறிவைத்து, பா.ஜ.க., தனது வியூகத்தை அமைத்து வருகிறது. அதன் வரிசையில் தான் மூன்று மாநிலங்களில் முதல்வர் பெயரும் அறிவித்துள்ளது.


மேலும் படிக்க - தேர்தல் அரையிறுதி வெற்றி.. 2024 லோக்சபா தேர்தலில் எதிரொலிக்குமா? இதுவரை நடந்தது என்ன?


2024 லோக்சபா தேர்தல் வியூகத்தின் ஒருபகுதியாக மூன்று மாநிலங்களின் முதல்வர் பதவிக்கு பா.ஜ.க., இறுதி செய்திருக்கும் பெயர்களில் தெளிவாகக் காணலாம். மூன்று மாநில முதல்வர்களின் பெயர்களை அறிவித்ததுடன், 2024க்கான அரசியல் களத்தை தயார்படுத்தும் முயற்சியில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது. மேலும், இந்த மாநிலங்களில் ஜாதி சமன்பாட்டை உருவாக்க பாஜகவும் முனைகிறது.


ஏன் முதல்வர் பதவிக்கு மோகன் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்?


ஓபிசி பிரச்சினையை காங்கிரஸ் தொடர்ந்து எழுப்பி வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒருபுறம் காங்கிரஸுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மோகன் யாதவை மத்திய பிரதேசத்தில் மாநில முதல்வராக்கியது பாஜக. மறுபுறம், ஓபிசி வாக்குகளைப் பெறுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் ஓபிசி வாக்குகள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


தலித் இனத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் தேவ்தா மற்றும் விந்தியா பகுதியைச் சேர்ந்த பிராமணரான ராஜேந்திர சுக்லா ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்க உள்ளனர். அதே நேரத்தில் மாநிலத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மத்திய விவசாய அமைச்சராக இருந்த நரேந்திர தோமர், தனது  பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் மத்திய பிரதேச சட்டசபையின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படலாம். இத்தகைய சூழ்நிலையில், மோகன் யாதவை முன்னிறுத்தி, இந்தி பேசும் மாநிலங்களில், லோக்சபா தேர்தலுக்கு முன், பா.ஜ., சிறப்பான அரசியல் களத்தை தயார் செய்துள்ளது. 


மேலும் படிக்க - மோடி பிராண்ட் வெற்றி பெற்றது! ஹாட்ரிக் வெற்றியுடன் 2024 தேர்தலுக்கு தயாராகும் பாஜக


ஏன் பஜன்லால் சர்மாவுக்கு ராஜஸ்தான் முதல்வர் பதவி கிடைத்தது?


அதே சமயம் ராஜஸ்தானில் பஜன்லால் சர்மாவை முதல்வராக்க பாஜக அறிவித்துள்ளது. இதனுடன், மாநிலத்தில் உள்ள பிராமண வாக்காளர்களை கவரும் முயற்சியில் கட்சி ஈடுபட்டுள்ளது. புள்ளிவிவரங்களின்படி, ராஜஸ்தானில் 89 சதவீத இந்துக்கள் உள்ளனர். இதில், பட்டியல் சமூகத்தினரின் மக்கள் தொகை 18 சதவீதமாகவும், பழங்குடியினர் மக்கள் தொகை 13 சதவீதமாகவும் உள்ளது. அதேநேரத்தில் பிராமணர்களின் மக்கள் தொகை சுமார் ஏழு சதவீதமாக இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், பஜன்லால் சர்மாவை முன்னிறுத்தி பிராமண வாக்காளர்களை கவர பாஜக முயற்சித்துள்ளது. பிஜேபி தனது உறுதியான வாக்காளர்களை தக்க வைத்துக் கொள்ள பிராமண முகத்தை முன்வைத்துள்ளது.


முதல்வர் பதவிக்கு விஷ்ணு தேவ் சாய் தேர்ந்தெடுக்க காரணம் என்ன?


சத்தீஸ்கரில் பழங்குடியின வாக்காளர்களை வலுப்படுத்தும் வகையில் விஷ்ணு தேவ் சாயை முதல்வராக்க பாஜக அறிவித்துள்ளது. சத்தீஸ்கரில் பழங்குடியின வாக்காளர்கள் மிக முக்கியமானவர்கள் என கருதப்படுகிறார்கள். இங்குள்ள மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பழங்குடியினர். சத்தீஸ்கர் மாநிலத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால் பழங்குடியினர் சமூகத்தின் ஆதரவு கட்டாயம் தேவை.


90 சட்டமன்ற இடங்கள் உள்ள மாநிலத்தில், 29 இடங்கள் பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. இது தவிர, மாநிலத்தில் 11 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 4 இடங்கள் பழங்குடியின சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இது தவிர, பழங்குடியினரை முதல்வராக்க சத்தீஸ்கரில் பாஜக மேற்கொண்டுள்ள நடவடிக்கை, பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அதிகம் வசிக்கும் ஜார்கண்ட், ஒடிசா போன்ற மாநிலங்களிலும் தங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொள்ளலாம் என நினைக்கிறது.  


மேலும் படிக்க - BJP MPs Resign: சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற 10 பாஜக எம்.பி.க்கள் ராஜினாமா செய்தனர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ