புதுடெல்லி: என்சிபி தலைவர் சரத் பவாரின் இல்லத்தில் நடந்த கூட்டத்தில் பல எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் பல முக்கிய நபர்கள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 22) கலந்துகொண்டனர். 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக-வை தோற்கடிப்பதற்கான திட்டத்தை வகுக்கும் கூட்டமாக இது பார்க்கப்படுகின்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டி.எம்.சி தலைவர் யஷ்வந்த் சின்ஹா, பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், ராஷ்டிரிய லோக்தல் தலைவர் ஜெயந்த் சவுத்ரி, நேஷனல் கான்ஃபிரன்ஸ் கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா ஆகியோர் ஷரத் பவாரின் இல்லத்திற்கு சந்திப்பில் கலந்துகொள்ள சென்றனர். 


2024 மக்களவைத் தேர்தலுக்கு (Lok Sabha Elections) முன்னதாக எதிர்க்கட்சி ஒற்றுமை முயற்சிகளைத் தொடங்க இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என என்.சி.பி தேசிய செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக் கூறியதாக ஐ.ஏ.என்.எஸ் தெரிவித்துள்ளது.


முதல் சுற்றில், பவார் ஒரு சில முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஊடக நபர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் அதிகாரத்துவத்தினர், ஆய்வாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய நிபுணர்களை தனது புது தில்லி இல்லத்தில் சந்திப்பார் என்று மாலிக் கூறினார்.


அரசியல் தலைவர்களில் (Political Leaders) திரிணாமுல் காங்கிரசின் யஷ்வந்த் சின்ஹா, ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங், நேஷனல் கான்ஃபிரன்ஸ் கட்சியின் பாரூக் அப்துல்லா, சிபிஐயின் டி.ராஜா, முன்னாள் ஜே.டி.யு தலைவர் பவன் வர்மா மற்றும் பலர் உள்ளனர்.


ALSO READ: சரத் பவாருடன் ரகசிய சந்திப்பு நடந்ததா; மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றமா?


இவர்களைத் தவிர, நீதிபதி ஏ.பி. சிங் (ஓய்வு), ஜாவேத் அக்தர், கே.டி.எஸ். துளசி, கரண் தாப்பர், அஷுதோஷ், ஏ.மஜீத் மேமன், வந்தனா சவான், எம்.பி., எஸ்.ஒய். குரேஷி, கே.சி. சிங், சஞ்சய் ஜா, சுதீந்திர குல்கர்னி, கொலின் கோன்சால்வெஸ், கணஷ்யம் திவாரி மற்றும் பிரிதிஷ் நந்தி போன்ற முக்கிய நபர்களையும் அவர் சந்திப்பார்.
இருப்பினும், இது சில எதிர்க்கட்சிகளின் கூட்டம் என்று சிவசேனாவின் சஞ்சய் ரவுத் கூறினார்.


"இது அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டம் என்று நான் கூற மாட்டேன். இந்த கூட்டத்தில் எஸ்பி, பகுஜன் சமாஜ் கட்சி, ஒய்.எஸ்.ஆர்.சி.பி, டி.டி.பி மற்றும் டி.ஆர்.எஸ் ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை” என்று ரவுத் கூறினார்.


முன்னதாக இன்று, என்.சி.பி தனது தேசிய செயற்குழு கூட்டத்தை நடத்தி தற்போதைய தேசிய பிரச்சினைகள், கட்சியின் எதிர்கால கொள்கைகள் மற்றும் 2024 மக்களவைத் தேர்தலில் அதன் பங்கு ஆகியவை குறித்து விவாதித்தது.


இந்த கூட்டத்திற்கு ஷரத் பவார் (Sharad Pawar) தலைமை தாங்கினார். கட்சித் தலைவர்கள் சுப்ரியா சுலே, பிரபுல் படேல் மற்றும் சுனில் தத்கரே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


ஷரத் பவாரின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் இரண்டு மணி நேரம் நீடித்தது.


கூட்டத்தில் கட்சியின் எதிர்கால குறிக்கோள்கள் விரிவாக விவாதிக்கப்பட்டன என்று பவார் மராத்தி மற்றும் ஆங்கில மொழிகளில் தொடர் ட்வீட்டுகளின் மூலம் தெரிவித்தார்.


ALSO READ: COVID-19: இந்த ஆண்டும் அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR