சீரழிந்த நிலங்களை சீரமைக்க இந்தியா திட்டம்: ஐநாவில் பிரதமர் மோடி

பாலைவனமாக்கல், நிலச் சீரழிவு மற்றும் வறட்சி குறித்த ஐநாவின் உயர் மட்ட கூட்டத்தில், வருங்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான பூமியை விட்டுச் செல்வது என்பது நமது கடமை என்றும் பிரதமர் மோடி பேசினார். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 15, 2021, 07:02 AM IST
  • இந்தியாவில், கடந்த பத்து ஆண்டுகளில், சுமார் சுமார் 30 லட்சம் ஹெக்டேர் வனப்பரப்பு அதிகரித்துள்ளது.
  • நாட்டின் ஒருங்கிணைந்த வனப்பகுதி நாட்டின் மொத்த பரப்பளவில் நான்கில் ஒரு பங்காக அதிகரித்துள்ளது.
  • நிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் அறிவியல் பூர்வமான அணுகுமுறையை மேம்படுத்த இந்தியாவில் ஆய்வு மையம்
சீரழிந்த நிலங்களை சீரமைக்க இந்தியா திட்டம்: ஐநாவில் பிரதமர் மோடி title=

ஐநாபொதுச் சபையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi), ​​சீரழிந்த நிலங்களை மீட்டெடுப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார். UNCCD என்று அழைக்கப்படும் United Nations Convention to Combat Desertification, அதாவது பாலைவனமாக்கலை தடுப்பபதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் 14 வது மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி இதனை தெரிவித்தார்.

பாலைவனமாக்கல், நிலச் சீரழிவு மற்றும் வறட்சி குறித்த ஐநாவின் உயர் மட்ட கூட்டத்தில்,  "நில சீரழிவு நாங்கள் பாதையில் இருக்கிறோம். 2030 க்குள் இருபத்தி ஆறு மில்லியன் ஹெக்டேர் சீரழிந்த நிலத்தை மீட்டெடுப்பதை நோக்கி இந்தியா (India) நடவடிக்கை எடுத்து வருகிறது" என பிரதமர் மோடி (PM Modi) குறிப்பிட்டார். 

மனிதர்களின் செயல்களால் பூமிக்கு ஏற்படும் சேதத்தைக் கட்டுப்படுத்துவது ஒட்டுமொத்த மனிதக்குலத்தின் பொறுப்பு என்று வலியுறுத்திய பிரதமர் மோடி, வருங்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான பூமியை விட்டுச் செல்வது என்பது நமது கடமை என்றும் பிரதமர் மோடி பேசினார். 

ALSO READ | அந்நிய செலாவணி கையிருப்பில், இந்தியா உலகில் 5வது இடத்தை பிடித்து சாதனை

"இந்தியாவில், கடந்த பத்து ஆண்டுகளில், சுமார் சுமார் 30 லட்சம் ஹெக்டேர் வனப்பரப்பு அதிகரித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் ஒருங்கிணைந்த வனப்பகுதி நாட்டின் மொத்த பரப்பளவில் நான்கில் ஒரு பங்காக அதிகரித்துள்ளது" என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

நிலங்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் அறிவியல்பூர்வமான அணுகுமுறையை மேம்படுத்த இந்தியாவில் (India) ஒரு ஆய்வு மையம் அமைக்கப்படுவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.  இந்த உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் அடிப்படை நிலம் தான் எனக் கூறிய பிரதமர் மோடி,  எனவே நில வளங்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

குஜராத்தின் ரான் ஆப் கட்சில் உள்ள பன்னி பிராந்தியத்தில், புல்வெளிகளை வளர்ப்பதன் மூலம் நில மறுசீரமைப்பு எவ்வாறு செய்யப்படுகிறது என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். இதனால் "நில சீரழிவு  தடுக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், கால்நடை வளர்ப்பை ஊக்குவித்து, காலநடை வலர்ப்பவர்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துகிறது என்றார்.

ALSO READ | G-7 Summit: இந்தியாவுக்கு உதவிய அனைத்து நாடுகளுக்கும் நன்றி: பிரதமர் மோடி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News