மிஷன் 400: இலக்கை அடைய பிரதமர் மோடி தலைமையில் என்.டி.ஏ போடும் மாஸ்டர்பிளான்
Lok Sabha Elections 2024: ஒரு கூட்டணியில் கட்சிகள் அதிகமாக ஆக, பூசல்களும் அதிகமாகும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இந்தியா கூட்டண்யிலும் அது நடந்தது. அதை பாஜக நன்றாக பயன்படுத்திக் கொண்டது.
Lok Sabha Elections 2024: இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கிவிட்டன. வரும் வாரத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கட்சிகள் தங்கள் வாக்காளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. கூட்டணிகள், தொகுதிப் பங்கீடுகள் என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
தற்போது மத்தியில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி ஆட்சி நடத்தி வருகின்றது. வரும் தேர்தலிலும் குறைந்தபட்சம் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என ஆளும் கட்சி உறுதியாக உள்ளது. இந்த இலக்கை அடைய அனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டும் என பிரதமர் மோடி தனது கட்சியையும் தலைவர்களையும் வலியுறுத்தியுள்ளார். முன்னதாக சுமார் எட்டு மாதங்களுக்கு முன்பு, தேசிய ஜனநாயக கட்சிக்கு எதிரான கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணியை (இந்தியா கூட்டணி) அமைத்தன. அப்போது எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டுத் தாக்குதலை என்.டி.ஏ. தாங்குமா இல்லையா என்ற பேச்சுக்கள் எழுந்தன.
எனினும், பாஜக இதனால் கலக்கமடையாமல் 'மிஷன் 400' என்ற முழக்கத்தை எழுப்பியது. இதற்கு பிறகு அரசியல் வட்டாரங்களிலும் பொது மக்கள் மத்தியிலும் 'பாஜக வெற்றிபெறுமா இல்லையா' என்ற கேள்வி போய், 'பாஜக -வுக்கு 400 இடங்கள் கிடைக்குமா இல்லையா' என்ற கேள்வி எழுந்தது என அரசியல் வியூகவாதி பிரசாந்த் கிஷோர் கூறுகிறார். அதாவது பாஜக -வுக்கு வெற்றி நிச்சயம், எத்தனை இடங்கள் பிடித்து வெற்றி பெறும் என்பதுதான் கேள்வி என்ற நிலை உருவானது.
400 என்ற இலக்கை அடைய பாஜக பல வித விசேஷ உத்திகளை கையாண்டு வருகின்றது. அவற்றில் சிலவற்றை பற்றி இங்கே காணலாம்.
எதிர்க்கட்சி ஒற்றுமை
ஒரு கூட்டணியில் கட்சிகள் அதிகமாக ஆக, பூசல்களும் அதிகமாகும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இந்தியா கூட்டண்யிலும் அது நடந்தது. அதை பாஜக நன்றாக பயன்படுத்திக் கொண்டது. எதிர்க்கட்சிகளின் கூட்டணியை உடைப்பது மட்டுமின்றி, அதன் முக்கிய தலைவர்களையும் பாஜக கூட்டணியிலிருந்து விலக்கி வைத்தது. மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் குஜராத் முதல் மேற்கு வங்கம் வரை பல முக்கிய தலைவர்கள் பாஜக-வில் இணைந்துள்ளனர். குஜராத்தில், அர்ஜூன் மோத்வாடியா மற்றும் அம்பரீஷ் டெர் போன்ற மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர். மேற்கு வங்கத்தில், தபாஸ் ராய் ஆளும் டிஎம்சியை விட்டு பாஜகவுக்கு மாறினார். மோத்வாடியாவும் டெர்வும் குஜராத்தில் பிஜேபியின் வாய்ப்புகளை மேலும் உயர்த்துவார்கள். அதே போல், ராய் கொல்கத்தா வடக்கு மற்றும் வங்காளத்தில் டம்டம் போன்ற பகுதிகளில் டிஎம்சி -க்கு பாதிப்புகளை ஏற்படுத்துவார் என கூறப்படுகின்றது.
கூட்டணி உருவாக்கம்
இந்தியா கூட்டணியின் பலத்தை எதிர்கொள்வதற்காக, பாஜக எதிர்கட்சிகளின் கூட்டணியை உடைப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், ஒத்த எண்ணம் கொண்ட பிற பிராந்தியக் கட்சிகளை கவர்ந்திழுபதிலும் முழு கவனம் காட்டத் தொடங்கியது. கர்பூரி தாக்கூர் மற்றும் சவுத்ரி சரண் சிங் ஆகிய இரு முக்கிய பிரமுகர்களுக்கு பாரத ரத்னா விருதை நரேந்திர மோடி அரசு அறிவித்துள்ளது. நிதீஷ் குமார் தலைமையிலான ஜேடியுவை எண்டிஏ மீண்டும் பெற்றதற்கு தாக்கூர் ஒரு காரணமாக கூறப்படுகின்றது. அதே போல், சௌத்ரி சரண் சிங்கிற்கு அளிக்கப்பட்ட பாரத ரத்னா ஜெயந்த் சவுத்ரியின் ஆர்எல்டி -ஐ ஆளும் கூட்டணிக்குள் கொண்டு வந்தது. இது பீகார் மற்றும் உத்தரபிரதேசத்தில் பாஜகவின் தேர்தல் வாய்ப்புகளை வலுப்படுத்தியது. தென்னிந்தியாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஒரு மிகப்பேரிய ஊக்கமாக, கர்நாடகாவில் பாஜக உடன் ஜேடிஎஸ் இணைந்துள்ளது. அதேபோல், ஆந்திரப் பிரதேசத்தில் டிடிபி-ஜன சேனாவுடனும் கைகோர்த்துள்ளது.
வேட்பாளர்களின் தேர்வு
மக்களவைத் தேர்தலுக்கான தனது முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. மக்கள் மத்தியில் வெற்றி கண்ட தலைவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் சர்ச்சைக்குரிய அறிக்கைகளை வழங்கிய தலைவர்களை கட்சி தவிர்த்துள்ளது. 2019 தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலானவர்களை கட்சி மீண்டும் களமிறக்கியுள்ளது. எதிர்க்கட்சிகளுடனான உறவைத் துண்டித்துவிட்டு சமீபத்தில் கட்சியில் இணைந்த தலைவர்களையும் பாஜக களமிறக்கியுள்ளது. அதற்கு உத்தரபிரதேசத்தின் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ரித்தேஷ் பாண்டே ஒரு உதாரணம்.
இந்த அனைத்து காரணிகளும் ஒரு பக்கம் இருந்தாலும், தேர்தல் பிரச்சாரத்தின் மையப்புள்ளியாக பாஜக வைத்திருப்பது நரேந்திர மோடி (PM Narendra Modi) அரசின் நலத் திட்டங்களைத் தான். இதைப் பற்றிதான் பாஜக தொடர்ந்து மக்களிடம் எடுத்துக்கூறி வருகின்றது. உஜ்வாலா திட்டம், ஆயுஷ்மான் பாரத், இலவச கழிப்பறைகள், பக்கா வீடுகள் மற்றும் பல நலத்திட்டங்களைச் சுற்றியே பாஜகவின் தேர்தல் பிரச்சாரம் அமைக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ