Lok Sabha Elections: கடந்த சில நாட்களாக உத்தரப் பிரதேசத்தின் அமேதி மற்றும் ரேபரேலி மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த தொகுதிகளில் மக்களவைத் தேர்தலின் ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவில் மே 20ம் தேதி அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. மே 3 ஆம் தேதி 5 ஆம் கட்டத்திற்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியாக இருந்த நிலையில், அன்றுதான் காங்கிரஸ் இந்த தொகுதிகளுக்கான தனது வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரேபரேலியில் ராகுல் காந்தியும், அமேதியில் கிஷோரிலால் சர்மாவும் போட்டியிடுவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதற்கிடையில், அமேதியில் கே.எல்.சர்மாவின் பெயர் அறிவிக்கப்பட்டவுடன், அனைவரின் பார்வையும் அவர் மீது திரும்பியுள்ளது. அமேதியில் பாஜகவின் ஸ்மிருதி இரானியை எதிர்த்து கே.எல்.சர்மா போட்டியிடுகிறார். கிஷொரி லால் சர்மா காங்கிரசில் புது முகம் அல்ல. பல ஆண்டுகளாக கட்சியுடன், குறிப்பாக கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் பயணித்துள்ள காங்கிரஸ் அபிமானி அவர். 


ரேபரேலி மற்றும் அமேதியில் முக்கிய நபர்


கே.எல்.சர்மா காந்தி குடும்பத்துக்கு நெருக்கமானவர். இது தவிர, ரேபரேலியில் சோனியா காந்தியின் பிரதிநிதியாகவும் அவர் நீண்ட காலம் பணியாற்றியாற்றியுள்ளார். காந்தி குடும்பம் தொடர்பான விஷயங்களைப் பொறுத்தவரை, ரேபரேலி மற்றும் அமேதியில் கே.எல்.சர்மா முக்கிய நபர், அதாவது கட்சியில் மிக முக்கியமான நபராக அவர் பார்க்கப்படுகிறார். காந்தி குடும்பத்தினர் பிற அரசியல் பணிகளுக்காக டெல்லி அல்லது பிற இடங்களில் இருக்கும் பெரும்பாலான சமையங்களில் இவ்விரு தொகுதிகளின் கட்சி நடப்புகளையும் இவர்தான் கவனித்துக்கொள்வதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


மேலும் படிக்க | துப்பாக்கி முனையில் பாலியல் வன்புணர்வு... பிரஜ்வெல் ரேவண்ணா மீது தொடரும் புகார்கள்!


ராஜீவ் காந்திக்கு நெருக்கமானவராக இருந்தார்


கே.எல்.சர்மா பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். அவர் 1983ஆம் ஆண்டு முதன்முதலாக அமேதிக்கு காங்கிரஸ் கட்சிக்காரராக வந்தார். அவர் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான (மறைந்த) ராஜீவ் காந்திக்கு நெருக்கமானவர். அமேதியில் தங்கியிருந்து கட்சிக்காக கடுமையாக உழைத்தார் கே.எல்.சர்மா. 1991-ல் ராஜீவ் காந்தி இறந்த பிறகும், அமேதியில் காங்கிரஸை வலுப்படுத்த அவர் தொடர்ந்து பணியாற்றினார். பல தேர்தல்களில் மற்ற காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக அவர் தொடர்ந்து பிரச்சாரம் செய்துள்ளார். 1999ல் சோனியா காந்தியின் முதல் தேர்தல் பிரசாரத்தில் கே.எல்.சர்மா முக்கிய பங்கு வகித்தார்.


கிஷோரி லால் சர்மா பஞ்சாபை சேர்ந்தவராக இருந்தாலும், அமேதியில் பலருக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காங்கிரஸ் கட்சி மீதுள்ள அபிமானம் காரணமாக உத்தபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிகாக களப்பணியில் ஈடுபட்டு வரும் அவரை அனைவரும் உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்தவராகவே பார்க்கிறார்கள். கடந்த சுமார் 40 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி சார்பாக அரசியல் களப்பணியில் ஈடுபட்டு வரும் அவருக்கு தற்போது வயது 63. அவர் அமேதியில் அடி எடுத்து வைத்த நாள் முதல் இன்று வரை, அவர் பணியாற்றிய சட்டமன்ற தேர்தல்களும், மக்களவைத் தேர்தல்களும் ஏராளம். கட்சியின் வெற்றிக்காக காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முழு முனைப்போடு பிரச்சாரத்தில் ஈடுபடும் அவரை காங்கிரஸ் தொடண்டர்கள் ஆதர்ச காங்கிரஸ் அபிமானியாக பார்க்கிறார்கள். 


அமேதி மக்களவைத் தேர்தல் 2024


ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவில் அமேதியில் மே 20-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் 17-ல் காங்கிரஸ் போட்டியிடுகிறது. மீதமுள்ள 63 இடங்களில், சமாஜ்வாதி கட்சி மற்றும் இந்தியா கூட்டணியின் பிற சிறிய கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடக்கும் 2024 மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறுகிறது. 


மேலும் படிக்க | மக்களவை தேர்தல் 2024... பிரியங்கா - ராபர் வாத்ரா போட்டியிடாமல் தவிர்ப்பதன் காரணம் என்ன..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ