மக்களவைத் தேர்தல் முதல் கட்டம்: லோக்சபா தேர்தல் 2024 இன் முதல் கட்டத்தில் தங்கள் வாக்கை செலுத்த இந்தியா தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், 102 பாராளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய முதல் கட்ட தேர்தலுக்கான விரிவான வரைபடத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 16.63 கோடி தகுதியுள்ள வாக்காளர்கள் நாட்டின் ஜனநாயக அரசியலை வடிவமைக்கத் தயாராக உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள், வெப்காஸ்டிங், பறக்கும் படைகள், மேம்பட்ட கண்காணிப்பு என அனைத்து நடவடிக்கைகளுக்கும் தேர்தல் ஆணையம் தன்னை தயார் படுத்தி உள்ளது. நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தல் திருவிழாவை கொண்டாட மக்கள் தயாராகி விட்டனர். நாளை காலை வாக்காளர்கள் தங்கள் வாக்கை செலுத்த உள்ளனர். வாருங்கள் மக்களவைத் தேர்தல் அனைத்து ஏற்பாடுகள் குறித்து அறிந்துக்கொள்ளுவோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லோக்சபா தேர்தல் முதல் கட்டம் ஒரு கண்ணோட்டம்


-- 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும்.


-- இந்திய தேர்தல் ஆணையம் 16.63 கோடி வாக்காளர்கள் முதல் கட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.


-- 1.87 லட்சம் வாக்குச் சாவடிகள் கொண்ட நெட்வொர்க் தயார். 


-- தேர்தல் சுமூகமாகவும், அமைதியாகவும் நடக்க 18 லட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.


வாக்காளர் புள்ளி விவரங்கள்


--  முதல் கட்ட வாக்குப்பதிவில் 8.4 கோடி ஆண்களும், 8.23 கோடி பெண்களும், 11,371 மூன்றாம் பாலினத்தவர்களும் வாக்கு செலுத்த உள்ளனர்.


-- 35.67 லட்சம் பேர் முதல் முறை வாக்காளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


-- 3.51 கோடி வாக்காளர்கள் 20 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் 


களத்தில் உள்ள வேட்பாளர்கள்


-- 102 தொகுதிகளில்  1491 ஆண்களும், 134 பெண்களும் என மொத்தம் 1625 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.


மேலும் படிக்க - கடந்த முறை முதல் கட்டத்தில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கூட்டணி.. மீண்டும் சாத்தியமா?


பாதுகாப்பு ஏற்பாடுகள்


-- 41 ஹெலிகாப்டர்கள், 84 சிறப்பு ரயில்கள் மற்றும் பணியாளர்கள் போக்குவரத்திற்காக கிட்டத்தட்ட 1 லட்சம் வாகனங்கள் கொண்ட பாரிய தளவாட அமைப்பு


-- 50% வாக்குச் சாவடிகளுக்கு வெப்காஸ்டிங் திட்டமிடப்பட்டுள்ளது


-- நுண்ணிய கண்காணிப்பாளர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.


-- வாக்களார்களை வரிசைப்படுத்தல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள்


-- தேர்தல் விதிமுறைகளை கடைபிடிப்பதை உறுதி செய்ய பணியாளர்கள்


- அசம்பாவிதம் நடக்காமல் இருக்க 4627 பறக்கும் படைகள், 5208 புள்ளியியல் கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் 2028 வீடியோ கண்காணிப்புக் குழுக்களுடன் கூடிய விரிவான கண்காணிப்பு நெட்வொர்க்.


-- சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க மாநிலங்களுக்கு இடையே எல்லை சோதனைச் சாவடி அமைப்பு


-- மது, போதைப்பொருள், பணம் மற்றும் இலவசப் பொருட்கள் சட்டவிரோதமாகப் புழங்குவதைத் தடுக்க கடல் மற்றும் விமானப் பாதைகளில் கண்காணிப்பு நீட்டிக்கப்பட்டது.


மக்களவைத் தேர்தல் 2024 முழு ஆட்டவனை


நாடு முழுவதும் 543 மக்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ஏப்ரல் 19 ஆம் தேதி துவங்கி, 2024 ஜூன் 1 ஆம் தேதி வரை என ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறும்.


முதல் கட்ட வாக்குப்பதிவு - ஏப்ரல் 19
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு - ஏப்ரல் 26
மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு - மே 7
நான்காம் கட்ட வாக்குப்பதிவு -  மே 13, 
ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு -மே 20 
ஆறாம் கட்ட வாக்குப்பதிவு -  மே 25 
ஏழாம் கட்ட வாக்குப்பதிவு -  ஜூன் 1 


மேலும் படிக்க - தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024 முழு வேட்பாளர் பட்டியல்.. எந்த தொகுதியில் யார் போட்டி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ