₹6200 கோடிக்கு ₹14,000 பறிமுதல் செய்வதா; விஜய் மால்லையா காட்டம்..!!!
விஜய் மல்லையாவிற்கு கடன் வழங்கிய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா கூட்டமைப்பை சேர்ந்த 13 நிதி நிறுவனங்கள் விஜய் அவருக்கு எதிராக வழக்கு நடத்தி வருகின்றன
தொழிலதிபர் விஜய் மால்யாவை (Vijay Mallya) திவால் ஆனவர் என அறிவித்து லண்டன் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதனால், விஜய் மல்லையாவின் சொத்துக்கள் முடக்கப்படுவதோடு, அவருக்கு கடன் அளித்த பாரத ஸ்டேட் வங்கி (SBI) தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்புக்கு கடனை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமடைந் துள்ளன.
லண்டன் உயர்நீதிமன்றம் தீர்ப்பை அடுத்து தப்பியோடிய குற்றவாளி என அறிவிக்கப்பட்ட விஜய் மால்யா, ட்வீட் ஒன்றை பதிவிட்டு, 6,200 கோடி ரூபாய்க்கு கடனுக்காக, 14,000 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது சொத்துக்களை அமலாக்க இயக்குநரகம் பறிமுதல் செய்கிறது என்றார். அமலாக்க துறைக்கு பணத்தை திருப்பித் தர வேண்டியிருப்பதால் வங்கிகள் அவரை திவாலாக்குகின்றன என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்துள்ளார்.
விஜய் மல்லையாவிற்கு கடன் வழங்கிய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) கூட்டமைப்பை சேர்ந்த 13 நிதி நிறுவனங்கள் அவருக்கு எதிராக வழக்கு நடத்தி வருகின்றன. விஜய் மால்யா வாங்கிய கடனுக்கு, ஜூன் 25, 2013 முதல், 11.5 சதவீத கூட்டு வட்டியின் அடிப்படையில் வட்டித் தொகை கணக்கிடப்பட்டு கடன் தொகை வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
ALSO READ | Delta variant: சிக்கலில் அமெரிக்க பொருளாதாரம், அதிருப்தியை சந்திக்கும் ஜோ பைடன்
லண்டன் நீதிமன்றம் வழங்கிய திவால் தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்யப் போவதாக மல்லையா தெரிவித்துள்ளார் என்றாலும், அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இது குறித்து கருத்து தெரிவித்த வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா விஜய் மல்லையா பொருளாதார குற்றங்களுக்காக தேடப்பட்டுவரும் நிலையில், அவரை விசாரணைக்காக நாடு திரும்பி அழைத்து வர, இந்தியா சிறந்த வகையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என குறிப்பிட்டார்.
ALSO READ | NASA - SpaceX ஒப்பந்தம்: செவ்வாய்க்கு பிறகு வியாழன் கிரகத்தை குறி வைக்கும் நாசா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR