NASA - SpaceX ஒப்பந்தம்: செவ்வாய்க்கு பிறகு வியாழன் கிரகத்தை குறி வைக்கும் நாசா

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா, அங்கு  உயிரினங்கள் ஏதேனும் வாழ்கிறதா என்பது குறித்து உலகெங்கிலும் உள்ள விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 24, 2021, 12:24 PM IST
  • வியாழன் கிரகத்தில் உயிரினங்கள் ஏதேனும் வாழ்கிறதா என ஆய்வுகளை மேற்கொள்ள நாசா திட்டம்
  • பூமியிலிருந்து சுமார் 390 மில்லியன் மைல்கள் (63 கோடி கிலோமீட்டர்) தொலைவில் உள்ளது வியாழன் கிரகம்.
  • இந்த பயணம் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
NASA - SpaceX ஒப்பந்தம்: செவ்வாய்க்கு பிறகு வியாழன் கிரகத்தை குறி வைக்கும் நாசா title=

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா, அங்கு  உயிரினங்கள் ஏதேனும் வாழ்கிறதா என்பது குறித்து உலகெங்கிலும் உள்ள விண்வெளி விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.  

இது குறித்த ஆய்வுகளை மேற்கொள்வதற்காக நாசா (NASA) விண்கலங்களை அனுப்பி ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், வியாழன் கிரகத்தில் உயிரினங்கள் ஏதேனும் வாழ்கிறதா என்பது குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள நாசா ஏற்பாடுகளை தொடங்கியுள்ளது. இது தொடர்பாக நாசா மற்றும் எலோன் மஸ்கின் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் இடையில் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த பணி 2024 அக்டோபரில் தொடங்கும் என கூறப்படுகிறது.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா வியாழன் கிரகத்தில் உயிர்களைத் தேடும் பணியில், ஆய்வினை தொடங்க  எலோன் மஸ்க்கின் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. யுரோப்பா கிளிப்பர் (Europa Clipper) என்னும் இந்த மிஷன் திட்டத்தில், 2024  அக்டோபர் மாதத்தில் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து பால்கன் ஹெவி ராக்கெட் (Falcon Heavy rocket) ஏவப்படும் என்று தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி நிர்வாகம் (நாசா) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இடையே இதற்காக $178 மில்லியன் ஒப்பந்தம் கையெழுத்தானது.

ALSO READ | விண்வெளியில் துணி குப்பை அதிகமாகி விட்டது, சோப்பு அனுப்ப NASA திட்டம்

வியாழன் கிரகம், பூமியிலிருந்து சுமார் 390 மில்லியன் மைல்கள் (63 கோடி கிலோமீட்டர்) தொலைவில் உள்ளது, மேலும் இந்த பயணம் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு அறிக்கையில், நாசா யூரோபா கிளிப்பர் (ராக்கெட்) வியாழன் கிரகம் குறித்து விரிவான ஆய்வை நடத்தும் என்றும் இந்த கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாதகமான நிலைமைகள் உள்ளதா என்பது குறித்து ஆராயப்படும் என்றும் கூறினார். இந்த ராக்கெட்டுகளில் உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமராக்கள், ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் பிற வகை நவீன தொழில்நுட்ப கருவிகள் பொருத்தப்படும். இது தவிர, பனி அடுக்குக்குள் நுழைவதற்கான ரேடாரும் அதில் சேர்க்கப்படும்.

ALSO READ | இன்னும் 30 ஆண்டுகளில் மனிதர்கள் வேற்று கிரகவாசிகளாக ஆவார்கள்: விஞ்ஞானிகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News