UK-விலிருந்து Meerut திரும்பிய குடும்பம் புதிய வகை COVID-19-ஆல் பாதிக்கப்பட்டுள்ளதாக அச்சம்
லண்டனிலிருந்து திரும்பி வந்த மூன்று பேரும் புதிய வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லக்னோ: சமீபத்தில் இங்கிலாந்தில் இருந்து உத்தரப்பிரதேசத்தின் மீரட்டுக்கு வந்தவர்களில் மொத்தம் மூன்று பேருக்கு COVID-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்த மூன்று பேரும் டிசம்பர் 14 ஆம் தேதி லண்டனிலிருந்து திரும்பினர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
லண்டனிலிருந்து திரும்பி வந்த மூன்று பேரும் புதிய வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட வைரஸின் புதிய மாறுபாட்டால் லண்டனிலிருந்து திரும்பிய மூன்று பேரும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சுகாதாரத் துறை அதிகாரிகளும் அஞ்சுகின்றனர்.
டிசம்பர் 25 அன்று, மீரட்டில் மட்டும் கொரோனா வைரஸால் (Coronavirus) புதிதாக 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை அடுத்து இங்கு மொத்தமாக பாதிகப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,402 ஆக உயர்ந்துள்ளது. நகரத்தில் கொரோனா வைரஸ் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 390 ஆக உள்ளது. சிகிச்சையில் உள்ளவர்களின் என்ணிக்கை 1201 என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ALSO READ: 8 ஐரோப்பிய நாடுகளுக்கு பரவிய புதிய வகை கொரோனா வைரஸ்: WHO
முன்னதாக, டிசம்பர் 15 ஆம் தேதி நாக்பூரில் COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்ட 28 வயதான ஒருவருக்கு இங்கிலாந்தில் பரவிக்கொண்டிருக்கும் தொற்றின் புதிய மாறுபாடு இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது. இதை நாக்பூரின் அரசு மருத்துவக் கல்லூரி நிர்வாகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இறுதி சோதனை அறிக்கைகள் வரும் வரை நோயாளிக்கு கொரோனா வைரசின் புதிய மாறுபாடு கொண்ட வைரஸ் தொற்று உள்ளதா என்பதை உறுதிப்படுத்த முடியாது என்று நாக்பூர் (Nagpur) நகராட்சி ஆணையர் கூறினார். அவரது மாதிரிகள் இப்போது மேலதிக விசாரணைக்காக புனேவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
கடந்த வாரம், கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு முதன்முதலில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டது. நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த மாறுபாடு மற்ற SARS-CoV-2 வகைகளை விட அதிகமாக பரவக்கூடியது. பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல நாடுகள் இங்கிலாந்துக்கான பயணத் தடைகளை விதித்துள்ளன.
2020 டிசம்பர் 31 வரை இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் (England) இடையிலான அனைத்து விமான போக்குவரத்தையும் இந்தியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
COVID-19 வைரஸின் புதிய மாறுபாடு இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) டிசம்பர் 20 அன்று பொதுமக்களுக்கு தெரிவித்திருந்தார்.
ALSO READ: நாக்பூர் நபர் மூலம் இந்தியாவில் நுழைந்துவிட்டதா புதிய வகை கொரோனா வைரஸ்?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR