டெல்லியில் முழு ஊரடங்கு; மதுக் கடைகளில் அலைமோதும் குடிமக்களின் கூட்டம்!
Delhi Lockdown Liquor Store News: டெல்லியில் இன்று இரவு முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மதுக் கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதியது.
Delhi Lockdown Liquor Store News: கொரோனா வைரசின் இரண்டாவது அலை இந்தியாவை படுத்தி எடுத்து வருகிறது. தினசரி தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்க கொண்டிருக்கும் நிலையில், இறப்பு என்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருப்பது பீதியை கிளப்பியுள்ளது.
உலகெங்கிலும் உள்ள மொத்த கொரோனா பாதிப்பு (Coronavirus) எண்ணிக்கை 141 மில்லியனுக்கும் அதிகமாகவும், இறப்பு எண்ணிக்கை 3 மில்லியனுக்கும் அதிகமாகவும் அதிகரித்துள்ளது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா தொற்று பெருத்த பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
டெல்லியில் (Delhi) நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 25,462 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது, 161 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தி உள்ளது. அத்துடன், புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது பற்றி அரசு ஆலோசனை நடத்தி வந்தது. இந்த சூழலில் புதிய கட்டுப்பாடுகளை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) இன்று அறிவித்தார்.
ALSO READ | Delhi Curfew: கொரோனா பாதிப்பு 30% அடுத்த திங்கள் காலை வரை ஊரடங்கு உத்தரவு
எனவே கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இன்று இரவு 10 மணி முதல் வரும் திங்கட்கிழமை (ஏப்ரல் 26) காலை 6 மணி வரை ஊரடங்கு (Lockdown) உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அத்தியாவசிய சேவைகள், உணவு சேவைகள், மருத்துவ சேவைகள் தொடர்ந்து நடைபெறும். திருமண நிகழ்ச்சியில் 50 பேர் வரை மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்படும்.
இந்நிலையில் 6 நாட்களுக்கு டெல்லியில் முழு ஊரடங்கு (Delhi Curfew) கடைப்பிடிக்கப்படுவதால் மதுக்கடைகளும் மூடப்படுகின்றன. இதனால் தேவையான மதுபானங்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்வதற்காக, மதுக்கடைகளில் குடிமகன்கள் வரிசை கட்டி நின்றனர்.
டெல்லியின் பல்வேறு பகுதிகளில் உள்ள மதுபானங்கடைகளில் மதுப்பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கி செல்கின்றனர். மதுப்பிரியர்கள் முக்கவசம் இல்லாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் மதுக்கடைகள் முன் குவிந்ததால் கொரோனா மேலும் பரவும் பீதி எற்பட்டுள்ளது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR