வருத்தத்தில் மக்கள்; கேஸ் விலை உயர்வு; புதிய ரேட் என்ன
டெல்லியில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 15 அதிகரித்து ரூ.899.50க்கு விற்பனை
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி விட்டது என்பதையும் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கி விட்டது என்பதையும் பார்த்து வருகிறோம்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு மிகப் பெரிய பாதிப்பாக இருக்கும் நிலையில் அடுத்த கட்டமாக தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் (LPG) விலையும் உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி தற்போது வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கேஸ் (LPG cylinders) சிலிண்டரின் விலை ரூ.15.50 உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வு கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. அப்போதிலிருந்து தொடர்ந்து இந்த விலை உயர்ந்துக்கொண்டே போகிறது. தற்போது எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் அக்டோபர் மாதத்திற்கான எரிவாயு விலையை வெளியிட்டுள்ளன. அதன்படி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) டெல்லியில் சிலிண்டருக்கு 14 கிலோ வணிக எரிவாயு சிலிண்டரின் (LPG Cylinder Hike) விலையை ரூ .15 அதிகரித்துள்ளது. இதனால் 14 கிலோ வணிக எரிவாயு சிலிண்டரின் விலை சிலிண்டர் 899.50 ஆக அதிகரித்துள்ளது.
மாதம் | டெல்லி | கொல்கத்தா | மும்பை | சென்னை |
அக்டோபர் 6, 2021 | 899.50 | 911.00 | 899.50 | 900.50 |
செப்டம்பர் 1, 2021 | 884.5 | 911 | 884.5 | 900.5 |
ஆகஸ்ட், 18, 2021 | 859.5 | 886 | 859.5 | 875 |
ஆகஸ்ட், 1, 2021 | 834.5 | 861 | 834.5 | 850 |
ஜூலை 1, 2021 | 834.5 | 861 | 834.5 | 850 |
ஜூன் 1, 2021 | 809 | 835.5 | 809 | 825 |
மே 1, 2021 | 809 | 835.5 | 809 | 825 |
ஏப்ரல் 1, 2021 | 809 | 835.5 | 809 | 825 |
மார்ச் 1, 2021 | 819 | 845.5 | 819 | 835 |
பிப்ரவரி 25, 2021 | 794 | 820.5 | 794 | 810 |
பிப்ரவரி 15, 2021 | 769 | 795.5 | 769 | 785 |
பிப்ரவரி 4, 2021 | 719 | 745.5 | 719 | 735 |
ஜனவரி 1, 2021 | 694 | 720.5 | 694 | 710 |
டிசம்பர் 15, 2020 | 694 | 720.5 | 694 | 710 |
டிசம்பர் 02, 2020 | 644 | 670.5 | 644 | 660 |
நவம்பர் 01, 2020 | 594 | 620.5 | 594 | 610 |
அக்டோபர் 01, 2020 | 594 | 620.5 | 594 | 610 |
ஆகஸ்ட் 01, 2014 | 920 | 964.5 | 947 | 922 |
ஜனவரி 1, 2014 | 1241 | 1270 | 1264.5 |
எல்பிஜி விலையை எவ்வாறு சரிபார்ப்பது?
எல்பிஜி சிலிண்டரின் விலையை நீங்கள் சரிபார்க்க விரும்பினால், இதற்காக நீங்கள் அரசாங்க எண்ணெய் நிறுவனத்தின் இணையதளத்திற்குச் செல்லவும். இங்கு நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் புதிய கட்டணங்களை வெளியிடுகின்றன. (https://iocl.com/Products/IndaneGas.aspx) இணைப்பில் உங்கள் நகரத்தின் எரிவாயு சிலிண்டர்களின் விலையை நீங்கள் பார்க்கலாம்.
ALSO READ | LPG மானியம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்து விட்டதா என நொடிகளில் தெரிந்து கொள்ளலாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR