LPG Cylinder Price: மீண்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில், LPG சிலிண்டர்களின் விலையை அரசாங்கம் மாற்றுகிறது. அந்த வகையில் LPG கேஸ் சிலிண்டரின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 1, 2021, 07:55 AM IST
LPG Cylinder Price: மீண்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு title=

LPG Cylinder Price: ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில், LPG சிலிண்டர்களின் விலையை அரசாங்கம் மாற்றுகிறது. அந்த வகையில் LPG கேஸ் சிலிண்டரின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

19 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை 
மூன்று மாத காலத்திற்கு பின் கடந்த ஜூலை மாதம் சமையல் எரிவாயு விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதமும் எரிவாயு விலை திடீரென 25 ரூபாய் உயர்த்தப்பட்டு இருக்கிறது. தற்போது எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் செப்டம்பர் மாதத்திற்கான எரிவாயு விலையை வெளியிட்டுள்ளன. அதன்படி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) சிலிண்டருக்கு 19 கிலோ வணிக எரிவாயு சிலிண்டரின் (LPG Cylinder Hike) விலையை ரூ .75 அதிகரித்துள்ளது. இதனால் 19 கிலோ வணிக எரிவாயு சிலிண்டரின் விலை சிலிண்டர் 1831.50 ஆக அதிகரித்துள்ளது.

ALSO READ | இன்று முதல் பல முக்கிய விதிகளில் மாற்றம்; உங்களுக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்துமா  

14 கிலோ எல்பிஜி சிலிண்டரின் விலை
எனினும், வீட்டு உபயோகத்திற்காக 14.2 கிலோ மானியம் இல்லாத எல்பிஜி சிலிண்டரின் (LPG Cylinder) விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. அதன்படி, 14.2 கிலோ மானியம் இல்லாத எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.25 ஆக உள்ளது. இதன் பிறகு, இப்போது சென்னையில் மானியம் இல்லாமல் 14.2 கிலோ சிலிண்டரின் விலை ரூ.900.50 ஆக உயர்ந்துள்ளது.






மாதம் டெல்லி கொல்கத்தா மும்பை சென்னை
செப்டம்பர் 1, 2021 884.5 911 884.5 900.5
ஆகஸ்ட், 18, 2021 859.5 886 859.5 875
ஆகஸ்ட், 1, 2021 834.5 861 834.5 850
ஜூலை 1, 2021 834.5 861 834.5 850
ஜூன் 1, 2021 809 835.5 809 825
மே 1, 2021 809 835.5 809 825
ஏப்ரல் 1, 2021 809 835.5 809 825
மார்ச் 1, 2021 819 845.5 819 835
பிப்ரவரி 25, 2021 794 820.5 794 810
பிப்ரவரி 15, 2021 769 795.5 769 785
பிப்ரவரி 4, 2021 719 745.5 719 735
ஜனவரி 1, 2021 694 720.5 694 710
டிசம்பர் 15, 2020 694 720.5 694 710
டிசம்பர் 02, 2020 644 670.5 644 660
நவம்பர் 01, 2020 594 620.5 594 610
அக்டோபர் 01, 2020 594 620.5 594 610
ஆகஸ்ட் 01, 2014 920 964.5 947 922
ஜனவரி 1, 2014 1241 1270 1264.5 1234

எல்பிஜி விலையை எவ்வாறு சரிபார்ப்பது?
எல்பிஜி சிலிண்டரின் விலையை நீங்கள் சரிபார்க்க விரும்பினால், இதற்காக நீங்கள் அரசாங்க எண்ணெய் நிறுவனத்தின் இணையதளத்திற்குச் செல்லவும். இங்கு நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் புதிய கட்டணங்களை வெளியிடுகின்றன. (https://iocl.com/Products/IndaneGas.aspx) இணைப்பில் உங்கள் நகரத்தின் எரிவாயு சிலிண்டர்களின் விலையை நீங்கள் பார்க்கலாம்.

ALSO READ | LPG மானியம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்து விட்டதா என நொடிகளில் தெரிந்து கொள்ளலாம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News