சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை மகரவிளக்கு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் பிரசித்திபெற்றது மகர விளக்கு பூஜை ஆகும். இந்த ஆண்டு மகரவிளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. நாளை மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது.
மகர விளக்கு பூஜையின்போது சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் அடங்கிய பெட்டி பந்தளம் அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கும். மகரவிளக்கு பூஜையையொட்டி இந்த திருவாபரண பெட்டி பந்தளம் அரண்மனையில் இருந்து சபரிமலை நோக்கி புறப்பட்டது. நாளை மாலை 6.30 மணிக்கு இந்த திருவாபரண பெட்டி சபரிமலை சன்னிதானத்தை வந்தடையும். அதைத் தொடர்ந்து சுவாமி ஐயப்பனுக்கு விசேஷ தீபாராதனை காட்டி மகர விளக்கு பூஜை நடைபெறும்.
மகர ஜோதி தெரியும் மலைப்பகுதிகளில் பக்தர்கள் இப்போதே கூடாரம் அடித்து தங்க தொடங்கிவிட்டனர். சபரிமலையில் பக்தர்கள் குவிந்து உள்ளதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து சபரிமலையில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.