Maha Vikas Aghadi Seat Sharing: மகா விகாஸ் அகாடி (எம்.வி.ஏ) கூட்டணி தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு உடன்பாடு எட்டியுள்ளது, நரிமன் பயிட்டில் உள்ள சிவசேனா தாக்கரே குழுவின் சிவாலயா அலுவலகத்தில் மகாவிகாஸ் அகாடியின் முக்கிய கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 21 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும் போட்டியிட உள்ளது. மேலும், மகாராஷ்டிரா தேர்தலில் என்சிபி (எஸ்பி) பிரிவு 10 இடங்களில் போட்டியிட உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதமூலம் லோக்சபா தேர்தலுக்காக அறிவிக்கப்பட்ட மகா விகாஸ் அகாடி தொகுதி பகிர்வு பகிர்வு இறுதியாக முடிந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீண்ட இழுபறிக்கு முற்றுப்புள்ளி


கடந்த சில நாட்களாக, சாங்லி, பிவாண்டி மற்றும் மும்பையில் உள்ள இடங்கள் தொடர்பாக மகாவிகாஸ் அகாடியில் சிக்கல் ஏற்பட்டது. இன்று அந்த மூன்று தொகுதிக்கும் இறுதியாக சீல் வைக்கப்பட்டது. உத்தவ் தாக்கரேவுக்கு சாங்லி தொகுதி கிடைத்துள்ளது. அதாவது மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் சாங்லி, பிவாண்டி, மும்பை மக்களவைத் தொகுதிகள் குறித்து அதிகம் பேசப்பட்டன. இந்த மூன்று தொகுதிகள் யாருக்கு ஒதுக்கீடு செய்வது என்று தொடர்ந்து பேச்சுவாரத்தை நடைபெற்று வந்தது. இறுதியாக இன்று மூன்று மக்களவைத் தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் சாங்லி மக்களவைத் தொகுதி தாக்கரே குழுவுக்கும், பிவாண்டி மக்களவைத் தொகுதி சரத் பவார் குழுவுக்கும், மும்பை (வடமத்திய) மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டு உள்ளது.


மேலும் படிக்க - இட ஒதுக்கீட்டில் வேலைக்கு வரும் நம் பிள்ளைகளை பார்த்தாலே பாஜக கதறுகிறது - ஸ்டாலின் சரவெடி!


மகாராஷ்டிராவில் 48 மக்களவைத் தொகுதிகள்


நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் 80 இடங்களைக் கொண்ட உத்திரப் பிரதேசத்தைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா இரண்டாவது பெரிய மாநிலமாக உள்ளது. அங்கு 48 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.


மகா விகாஸ் அகாடி தொகுதி பங்கீடு இறுதி


எம்விஏ சீட் பகிர்வு ஃபார்முலா: லோக்சபா தேர்தலுக்காக அறிவிக்கப்பட்ட மகா விகாஸ் அகாடி தொகுதி பகிர்வு சோர்முலா இறுதியாக முடிந்தது. குடி பட்வாவையொட்டி, உத்தவ் தாக்கரே, நானா படோல் மற்றும் சரத் பவார் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்து மக்களவைத் தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து தெரிவித்தனர். அப்போது அவர் ஃபார்முலாவையும் அறிவித்தார். உத்தவ் தாக்கரே (சிவசேனா) 21 இடங்களிலும், என்சிபி (சரத் பவார்) 10 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும் போட்டியிடுகின்றனர். கடந்த சில நாட்களாக, சாங்லி, பிவாண்டி மற்றும் மும்பையில் உள்ள இடங்கள் தொடர்பாக மகாவிகாஸ் அகாடியில் சிக்கல் ஏற்பட்டது. இன்று அது இறுதியாக சீல் வைக்கப்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரேவுக்கு சாங்லி தொகுதி கிடைத்துள்ளது.


மகாவிகாஸ் அகாடியில் அதிகம் பேசப்பட்ட சாங்லி, பிவாண்டி, மும்பை மக்களவைத் தொகுதிகளும் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் சாங்லி மக்களவைத் தொகுதி தாக்கரே குழுவுடனும், பிவாண்டி மக்களவைத் தொகுதி சரத் பவார் குழுவுடனும், மும்பை-வடமத்திய மக்களவைத் தொகுதி காங்கிரஸுடனும் இருக்கும்.


மேலும் படிக்க - A டூ Z.. கொடி பறக்குது! காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியின் முக்கிய அம்சங்கள் பட்டியல்


உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சி போட்டியிடும் தொகுதிகள் (21)


ஜல்கான், பர்பானி, நாசிக், பால்கர், கல்யாண், தானே, ராய்காட், மாவல், தாராஷிவ், ரத்னகிரி, புல்தானா, ஹட்கலங்கனே, சம்பாஜிநகர், ஷிர்டி, சாங்லி, ஹிங்கோலி, யவத்மால்-வாஷிம், வடமேற்கு மும்பை, தெற்கு மத்திய மும்பை, மும்பை தெற்கு, வடகிழக்கு மும்பை.


காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் (17)


நந்துர்பார், துலே, அகோலா, அமராவதி, நாக்பூர், பண்டாரா-கோண்டியா, கட்சிரோலி-சிமூர், சந்திராபூர், நாந்தேட், ஜல்னா, புனே, லத்தூர், சோலாப்பூர், கோலாப்பூர், ராம்டெக், மும்பை வடக்கு, வட மத்திய மும்பை 


சரத் பவார் தேசியவாதி காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் (10)


பாராமதி, ஷிரூர், சதாரா, பிவாண்டி, திண்டோரி, மாடா, ராவேர், வார்தா, தெற்கு அகமதுநகர், பீட்.


மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தல் ஐந்து கட்டங்களாக நடைபெறும்


ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் 2024 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் தேதிகளை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் மே 20 வரை ஐந்து கட்டங்களாக நடைபெற உள்ளது. ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அன்றே பொதுத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.


-- முதல் கட்டம்: ஏப்ரல் 19.


-- இரண்டாம் கட்டம்: ஏப்ரல் 26.


-- மூன்றாம் கட்டம்: மே 7.


-- நான்காவது கட்டம்: மே 13.


-- ஐந்தாவது கட்டம்: மே 20.


மேலும் படிக்க - ஓட்டுப்போட லீவு... ஏப்ரல் 19ஆம் தேதி பொது விடுமுறை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ