மகாராஷ்டிராவில் BJP தனியாக ஆட்சி அமைக்காது; சிவசேனாவுக்காக காத்திருப்போம்
பெரும்பான்மை இல்லாமல் மைனாரிட்டி அரசாங்கத்தை மாநிலத்தில் அமைப்பதற்கான முயற்சியை பாஜக முன்வைக்காது என ஆலோசனை கூட்டத்தில் முடிவு.
மும்பை: 2019 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கு (Maharashtra Legislative Assembly) பிறகு, மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் சிவசேனா (Shiv Sena) மற்றும் பாஜக (BJP) இடையே ஏற்பட்டுள்ள அதிகாரப்பகிர்வு முட்டுக்கட்டைக்கு மத்தியில் நேற்று (திங்களன்று) பாஜக தேசிய தலைவர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷாவைச் சந்தித்த பின்னர், கட்சியின் முக்கிய குழுத் தலைவர்களை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் (Devendra Fadnavis) சந்தித்து வருகிறார். இந்த கூட்டத்தில் ஃபட்னாவிஸைத் தவிர, சந்திரகாந்த் பாட்டீல், சுதிர் முங்கந்திவார், கிரிஷ் மகாஜன், பங்கஜா முண்டே மற்றும் வி சதீஷ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
நமக்கு கிடைத்த ஆதாரங்களின்படி, பெரும்பான்மை இல்லாமல் மைனாரிட்டி அரசாங்கத்தை மாநிலத்தில் அமைப்பதற்கான முயற்சியை பாஜக முன்வைக்காது என இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டதாகத் தெரிகிறது. பாஜக (Bharatiya Janata Party) தரப்பில் இருந்து, சிவசேனா ஆதரவு குறித்து சரியான முடிவு வரும் வரை பாஜகவே தலைமையில் ஆட்சி அமைக்க உரிமை கோரக்கூடாது என்ற கொள்கையில் தெளிவகா இருப்பதாகத் தெரிகிறது. அதேவேளையில், சிவசேனாவின் நடவடிக்கை குறித்து தொடர்ந்து கண்காணிக்கவும், அவர்களின் ஆதரவுக்காக காத்திருக்கவும், மேலிடத்தின் உத்தரவு இல்லாமல் கூட்டணி குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்கக் கூடாது என மகாராஷ்டிரா பாஜகவுக்கு டெல்லி (Delhi) உயர் மட்டம் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவில் முதல்வர் பதவி மற்றும் உள்துறை அமைச்சர் பதவியின் நாற்காலிகளைத் தவிர, ஐம்பது - ஐம்பது (50-50) சூத்திரம் குறித்து சிவசேனாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாஜக தலைவர் அமித் ஷா பச்சைகோடி காட்டி உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சிவசேனாவுக்கு 18 மந்திரி பதவிகளை வழங்கவும் பாஜக தயாராக உள்ளதாகக் தெரிகிறது.
இதற்கிடையில், பாஜக தலைவர்களுடன் நெருங்கிய மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் ஆலோசகரான கிஷோர் திவாரி, சிவசேனா மற்றும் பாஜக இடையே ஏற்பட்டுள்ள அதிகாரப்பகிர்வு தொடர்பாக தலையீட வேண்டும் எனக்கோரி ஆர்எஸ்எஸ் (Rashtriya Swayamsevak Sangh) தலைவர் மோகன் பகவத்துக்கு (Mohan Bhagwat) கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடித்தத்தில், பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் இடையிலான சர்ச்சை ஒருமித்த கருத்தினால் தீர்க்கப்படக்கூடிய வகையில், மாநிலத்தில் அரசாங்கத்தை அமைப்பது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் மத்தியஸ்தம் செய்யுமாறு வலியுறுத்தி ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு திவாரி கடிதம் எழுதியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பது குறித்து சிவசேனா இன்னும் பாஜகவுடன் முறையாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. முதல்வர் பதவியைப் பகிர்வது குறித்து மட்டும் பேசி உள்ளது.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே (Uddhav Thackeray) மகன் ஆதித்யா தாக்கரே (Aditya Thackeray)வெற்றி பெற்றதற்கு பாஜகவின் மூத்த தலைவர்களும் யாரும் சரியாக வாழ்த்து தெரிவிக்க என்பதில் சிவசேனாவும் கோபமடைந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தாக்கரே குடும்பத்தின் முதல் நபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதால், கூட்டணியின் தலைவர்கள் வாழ்த்துவர் என்று சிவசேனா எதுர்பார்த்தது. ஆனால் அது நடக்கவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது மட்டும் ஆதித்யா தாக்கரே வெற்றியை பாராட்டி முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் பேசினார்.
ஆனால் மறுபுறம், ஆதித்யாவின் வெற்றியை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (Nationalist Congress Party) தலைவர் சரத்பவார் (Sharad Pawar) குடும்பத்தினர் வாழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.