மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிர சட்டசபையில் மொத்தம் உள்ள 288 எம்.எல்.ஏ.க்களில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏ.க்களும், சிவசேனாவுக்கு 55 எம்.எல்.ஏக்களும், தேசியவாத காங்கிரசுக்கு 51 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரசுக்கு 44 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். இதர கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 29 பேர் உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிர மாநில சட்ட மேலவைக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. ஒரு எம்.எல்.சி வெற்றி பெற 26 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையின்படி, பாஜக 4 இடங்களிலும், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா 2 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்க முடியும். ஆனால், சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் சிலர் கட்சி மாறி வாக்களித்ததால், பாஜக 5 எம்.எல்.சி. இடங்களில் வெற்றி பெற்றது.


முன்னதாக மாநிலங்களவை தேர்தலிலும் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் சிலர் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்ததாக கூறப்படுகிறகு. இது ஆளும் மகா விகாஸ் அகாதி கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்த பிறகு சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் சிலரைத் தொடர்பு கொள்ள இயலவில்லை. இந்த நிலையில், சிவசேனாவைச் சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் குஜராத்தில் முகாமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க | மகாராஷ்டிரா மாநிலம் சாங்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் தற்கொலை


அவருடன் 5 அமைச்சர்கள் உட்பட 21 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தனது இல்லத்தில் கட்சித் தலைவர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். எதிர்க்கட்சித் தலைவரும், மாநில பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க டெல்லி சென்றுள்ளார்.


இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிவசேனா எம்பி சஞ்சய் ராவத், சிவசேனா விசுவாசிகளின் கட்சி எனவும், மத்தியப் பிரதேசத்தைப் போன்று மகா விகாஸ் அகாதி கூட்டணி அரசைக் கவிழ்க்க பாஜக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையாது எனவும் கூறினார். ஏக்நாத் ஷிண்டே கட்சிக்கு நேர்மையாக நடந்துகொள்ளும் தலைவர் எனவும், இன்று மாலைக்குள் இந்த சச்சரவுகள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடும் எனக் கூறினார். இந்த அடுத்தடுத்த நிகழ்வுகளால் மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | அக்னி வீரர்களுக்கு வாட்ச்மேன், முடித்திருத்தும் வேலை - பாஜக தலைவர்கள் சர்ச்சை கருத்து!


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR