லண்டன் செல்வதாக நிதி மந்திரியிடம் மல்லையா கூறினார் :சுப்ரமணியன் சுவாமி
பாராளுமன்றத்தில் நிதி மந்திரியிடம் தான் லண்டன் செல்வதாக மல்லையா கூறினார் என சுப்ரமணியன் சுவாமி ட்வீட் செய்துள்ளார்.
பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளிடம் ஆயிரக்கணக்கான கோடி (ரூ. 9,000) கடனை பெற்றுவிட்டு அதை திருப்பிச் செலுத்தாமல், நாட்டை விட்டு வெளியேறி லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். இதுக்குறித்து வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்க்கான இறுதி தீர்ப்பு வரும் டிசம்பர் 10 ஆம் நாள் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
இந்த வழக்கில் நேற்று ஆஜரானா விஜய் மல்லையா. பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அபொழுது கூறியதாவது, ஜெனீவாவில் நடைபெறும் ஒரு கூட்டத்தில் பங்கேற்க இருந்ததால், நாட்டை விட்டு வெளியேறும் முன் நிதி மந்திரி அருண் ஜெட்லியை சந்தித்து, வங்கிகளுடன் சமரசம் செய்ய தயார் எனவும், கடன்களை திரும்ப செலுத்துவதாக கூறி நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன். இது தான் உண்மை. என் மனசாட்சி தெளிவாக உள்ளது எனக் கூறினார்.
விஜய் மல்லையாவின் பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த நிதி மந்திரி அருண் ஜெட்லி, இந்த விவகாரம் குறித்து தனது முகநூல் பக்கத்தில் "உண்மை நிலை" என்று கடிதத்தை பதிவு செய்துள்ளார். அதில், விஜய் மல்லையா கூறியதில் "உண்மை" இல்லை. 2014 ஆம் ஆண்டு அவர் ராஜ்யசபா எம்.பியாக இருக்கும் போது, நாடாளுமன்றத்தில் உள்ள எனது அறைக்கு நான் சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த விஜய் மல்லையா கையில் ஆவணங்களை வைத்துக்கொண்டு நடந்தே படியே, என்னிடம் வங்கிகளிடம் வாங்கிய கடனை திரும்ப செலுத்த உள்ளதாக கூறினார். அதற்கு நான் என்னிடம் பேச வேண்டாம். வங்கிளிடம் பேசுங்கள் எனக் கூறினேன். மேலும் அவரிடம் இருந்த ஆவணங்களை கூட நான் வாங்க வில்லை" என கடிதத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
இதுக்குறித்து பாஜக ராஜ்யசபா எம்.பி சுப்ரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், விஜய் மல்லையா தப்பித்து சென்றதில் இரண்டு இரண்டு மறுக்கமுடியாத உண்மைகள் உள்ளன:
ஒன்று: லுக் அவுட் அறிவிப்பு. 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி அன்று அறிவிக்கபட்ட அறிக்கை மூலம் மல்லையாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டு இருந்த லுக் அவுட் நோட்டீஸ் நீர்த்துப்போகச்செய்யப்பட்டது. இதனால் விஜய் மல்லையா 54 பரிசோதிக்கப்பட்ட சாமான்களுடன் வெளியேறினார்.
இரண்டு: விஜய் மல்லையா, பாராளுமன்றத்தின் மத்திய அறையில், நிதி அமைச்சரிடம் தான் லண்டன் செல்ல இருப்பதாக கூறினார்.