21ஆம் நூற்றாண்டின் கோர ரயில் விபத்து... சம்பவ இடத்தில் மம்தா பானர்ஜி!
Odisha Train Accident: இது 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய விபத்து என்றும் இயல்புநிலையை மீட்டெடுப்பது தான் தங்களது பணி என்றும் ரயில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பின் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
Odisha Train Accident: கொல்கத்தாவில் இருந்து நேற்று மதியம் சென்னை புறப்பட்ட கோரமண்டல் எகஸ்பிரஸ் ரயில், ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நின்றுகொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்து நடந்த சிறிது நேரத்திலேயே, பெங்களூரு யஷ்வந்த்பூரில் இருந்து கொல்கத்தாவின் ஹவுரா நோக்கி சென்றுகொண்டிருந்த துரந்தோ ஹவுரா ரயில், தடம் புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸின் பெட்டிகள் மீது மோதியது. இதில், அந்த ரயிலின் சில பெட்டிகளும் தடம் புரண்டன.
இரண்டு ரயில்களையும் சேர்த்து மொத்தம் 17 பெட்டிகள் தடம் புரண்டு விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில், சமீபத்திய தகவலின் அடிப்படையில், இதுவரை 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும், சுமார் 288 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிகிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள கோபால்பூர், காந்தபாரா, பாலசோர், பத்ரக் மற்றும் சோரோ ஆகிய மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க | ஒடிசா ரயில் விபத்து: சிக்னல் கோளாறா... மனித தவறா... - சாத்தியக்கூறுகள் என்ன?
இதையடுத்து, தமிழ்நாட்டில் இருந்து அமைச்சர்கள், ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் ஒடிசா சென்றன. விபத்து நடந்த இடத்தை ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர். தொடர்ந்து, பிரதமர் மோடி பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு நேரில் வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் ரயில் விபத்து நடந்த பாலசோருக்கு வந்தார். ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்த அவர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,"கோரமண்டல் சிறந்த எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஒன்று, அது விபத்துக்குள்ளாகியுள்ளது. நான் மூன்று முறை ரயில்வே அமைச்சராக இருந்தேன். நான் பார்த்ததில் இது 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய ரயில் விபத்து. இதுபோன்ற வழக்குகளை ரயில்வே பாதுகாப்பு ஆணையத்திடம் ஒப்படைத்து அவர்கள் விசாரித்து அறிக்கை தருவார்கள்.
எனக்கு தெரிந்த வரையில் ரயிலில், மோதலை தடுக்கும் சாதனம் இல்லை. அந்த சாதனம் ரயிலில் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காது. இறந்தவர்களை மீட்டு கொண்டு வர முடியாது, ஆனால் இப்போது மீட்பு பணியும், இயல்நிலையை மீட்டெடுப்பதும் தான் எங்கள் வேலை" என்றார். மேலும், அவர்,'ரயில்வே இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்குகிறது. எங்கள் மாநில மக்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்குவோம், பணி முடியும் வரை ரயில்வே மற்றும் ஒடிசா அரசுடன் ஒத்துழைத்து பணியாற்றுவோம்.
நாங்கள் நேற்று 40 ஆம்புலன்ஸ்களை அனுப்பினோம். இன்று 70 ஆம்புலன்ஸ்களை அனுப்பினோம். எங்கள் டாக்டர்களில் நாற்பது பேர் இங்கு வந்துள்ளனர், அவர்கள் பணியை மேற்கொண்டு வருகின்றனர் செய்கிறார்கள்" என்றார்.
காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும், விபத்தில் பலியானவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் வழங்க மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது. விபத்து நடந்த இடத்தின் காட்சிகளில் இருந்து சில பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து அகலமாக தூக்கி எறியப்பட்டு, நசுக்கப்பட்ட அல்லது சிதைந்த நிலையில் மற்றும் பயணிகளின் உடைமைகள் சிதறிக் கிடப்பது போன்ற காட்சிகளில் இருந்து விபத்தின் அளவு தெளிவாகத் தெரிந்தது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ