கொல்கத்தா: மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் 2021 நேரடி புதுப்பிப்புகள்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 24 மணி நேரத்திற்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தேர்தல் ஆணையம் தடை செய்ததை எதிர்த்து, அவர் இன்று தர்ணாவில் அமர்ந்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மம்தா பானர்ஜிக்கு (Mamata Banerjee) எதிரான தனது உத்தரவில், தேர்த்ல ஆணையம் பல குற்றச்சாட்டுகளை விடுத்துள்ளது. மத்திய படைகளின் அரசியல் சார்பின்மையை அவர் கேள்வி எழுப்பினார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது உள்ளது. மேலும், தங்கள் வாக்குகளை பிரிக்க வேண்டாம் என அவர் சிறுபான்மையினரைக் கேட்டுக்கொண்டதும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. 


மம்தா பானர்ஜிக்குத் தடை விதித்து தேர்தல் ஆணையம் (Election Commisson) விடுத்த உத்தரவை, திரிணமுல் காங்கிரஸ், சிபிஎம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வெகுவாக விமசித்துள்ளனர். இது தொடர்பாக புகார் அளிக்க, திரிணமுல் காங்கிரஸ் இன்று மாலை தேர்தல் ஆணையத்தை அணுகும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


ALSO READ: Election Commission: தேர்தல் பிரசாரம் செய்ய மம்தா பானர்ஜிக்கு 24 மணி நேரத் தடை


மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் விதித்த தடைக்கு பல தரப்புகளிலிருந்தும் எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நாள் ஜனநாயகத்தின் கருப்பு நாள் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். #BlackDayForDemocracy ஹேஷ்டாக் டிரெண்டாகி வருகிறது. 


இதற்கிடையில், கூச் பெஹார் கொலைகள் குறித்து விமர்சிக்கத்தக்க வகையில் பேசியதற்காக பாஜக (BJP) தலைவர் ராகுல் சின்ஹாவை ​​48 மணி நேரம் பிரச்சாரம் செய்வதிலிருந்து தேர்தல் ஆணையம் தடை செய்தது. “நான்கு அல்ல, எட்டு பேர் சிதல்குச்சியில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்க வேண்டும். ஏன் நான்கு பேரை மட்டும் கொன்றார்கள், ஏன் எட்டு பேரைக் கொல்லவில்லை என மத்தியப் படைகளிடம் கேள்வி கேட்கப்பட வேண்டும்.....… குண்டர்கள் மக்களின் ஜனநாயக உரிமைகளை பறிக்க முயற்சிக்கின்றனர். மத்திய படைகள் தகுந்த முறையில் பதிலளித்தன. அது மீண்டும் நடந்தால், அவர்கள் மீண்டும் இப்படித்தான் பதிலளிப்பார்கள், ”என்று சின்ஹா கூறியிருந்தார்.


இந்த விஷயத்தின் அவசர நிலை காரணமாக சின்ஹா ​​தனது வாதத்தை முன்வைக்க ஒரு வாய்ப்பு வழங்கப்படாமல் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


ALSO READ: Cooch Behar வன்முறை மற்றும் மரணத்திற்கு மம்தா பானர்ஜி தான் காரணம்- அமித் ஷா


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR