சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் நேற்று (ஏப்ரல் 6) நடைபெற்றது. தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளத்தில் நேற்று ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல்கள் நடந்தன. வங்க தேசத்திலும், அசாமிலும் மூன்றாம் கட்ட தேர்தல்கள் நேற்று நடந்து முடிந்தன. வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 72.78 சதவிகித வாக்குப்பதிவு (Voting) நடந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் (Election Commission) வெளியிட்டுள்ள மாவட்ட வாரியான வாக்குப்பதிவு விவரங்கள் பின்வருமாறு:
மிகக் குறைந்த வாக்குப்பதிவு சென்னையிலும் (59.06%), அதிகப்படியான வாக்குப்பதிவு கரூரிலும் (83.92%) நடந்துள்ளது.
ALSO READ: சர்ச்சை பேச்சு! உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
தழிழக சட்டமன்றம் (Tamil Nadu Assembly) இப்படியொரு சட்டமன்ற தேர்தலை இதற்கு முன்னர் சந்தித்ததில்லை. முன்னாள் முதல்வர்கள் செல்வி. ஜெயலலிதா மற்றும் மு. கருணாநிதி என்ற இருபெரும் ஆளுமைகள் இல்லாமல் திமுக மற்றும் அதிமுக என இரண்டு கழகங்களும் எதிர்கொண்ட முதல் சட்டமன்ற தேர்தல் இது. புதிதாக வந்திருக்கும் அமமுக, மக்கள் நீதி மய்யம் கட்சிகளின் தாக்கம் களத்தையே மாற்றியமைத்திருக்கிறது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் புதிய கட்சிகளின் வரவு எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தமிழகத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அமமுக - தேமுதிக கூட்டணி மற்றும் நாம் தமிழர் என 5 முனை போட்டி உள்ளது. எனினும், பிரதான போட்டி திமுக - அதிமுக கூட்டணிக்கு இடையில் மட்டுமே உள்ளது என்று கூறலாம். யார் மீது மக்கள் அதிக நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்பதை மே மாதம் இரண்டாம் தேதி தெரிந்துகொள்ளலாம். இந்த நிலையில் எந்தக் கூட்டணி வெற்றி பெறும்? யார் முதல்வராக வருவார்? என்ற எதிர்பார்ப்பில் தமிழகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவும் காத்துக்கொண்டுள்ளது.
ALSO READ: நான்கு மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் தேர்தல் திருவிழா
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR