மேற்கு வங்க தேர்தல் களத்தில் மோடியை கடுமையாக எதிர்த்த மாயாவதிக்கு ஆதரவு தெரிவித்த அரசியல் தலைவர்களுக்கு மம்தா நன்றி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மேற்கு வங்க தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இங்கு பாஜக-வுக்கு கடும்போட்டியை மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கருதப்படுகிறது. 


முன்னாதக மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பாஜக தலைவர் அமித் ஷா, நேற்று முன்தினம் வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் போது ஆளும் திரிணமூல் காங்கிரஸாருக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.


திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அமைப்பை சேர்ந்தவர்கள் கருப்பு கொடி காட்டியும், ‘அமித்ஷா திரும்பிப்போ’ என்ற பதாகைகளை காட்டியும் கோஷமிட்டனர். பல்கலை., மாணவர்கள் விடுதி அருகே பேரணி மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணவர்கள் கற்களை வீசினார்கள். இதனையடுத்து பாஜக தொண்டர்கள் பதில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. 


இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தாக்குதலில் பல்லைக்கழக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்து 200 ஆண்டு பழமையான ஈஷ்வர சந்திர வித்யாசாகர் மார்பளவு சிலை உடைக்கப்பட்டது. இந்த கலவரத்துக்கு பாஜகவும், திரிணாமுல் காங்கிரஸூம் ஒருவரையொருவர் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றனர்.


இதற்கிடையே, மோடி மற்றும் பாஜக-வை கடுமையாக எதிர்த்ததால் மம்தாவை பாஜக-வினர் கடுமையாக விமர்சித்து வந்தனர். அப்போது மம்தாவுக்கு ஆதரவாக மாயாவதி, காங்கிரஸ் தரப்பில் ரன்தீப் சுர்ஜிவாலா உள்ளிட்டோர் குரல் கொடுத்தனர். 


மம்தாவை குறிவைத்து மோடியும் பாஜகவும் செயல்படுகிறது, இது ஏற்க முடியாத ஒன்று என மாயாவதி கூறியிருந்தார். 



தேர்தல் நடத்தை விதிமுறைகள் மோடி நடத்தை விதிமுறைகள் என மாறிவிட்டதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா குறிப்பிட்டு இருந்தார்.


இந்நிலையில் தனக்கு ஆதரவு குரல் எழுப்பிய மாயாவதி மற்றும் காங்கிரசுக்கு மம்தா நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது., 'மாயாவதி, அகிலேஷ் யாதவ், காங்கிரஸ், சந்திரபாபு நாயுடு மற்றும் எனக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. ஜனநாயகத்தின் மீது பாஜக நேரடி தாக்குதலை தொடுத்துள்ளது. இதற்கு மக்கள் தகுந்த பதிலடியை கொடுப்பார்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.