வீட்டிற்கு 10 நிமிடம் தாமதமகா திரும்பிய மனைவிக்கு, உத்திர பிரதேச கணவர் முத்தலாக் கூறி விவாகரத்து செய்த விவகாரம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்திர பிரதேச மாநிலம் எட்டாக் பகுதியை சேர்ந்த பெண்மனி, தனது தாய் வீட்டிற்கு சென்று வீடு திரும்ப 10 நிமிடம் தாமதம் ஆனதால் அவரது கணவர் அவருக்கு கைப்பேசி வாயிலாக முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார். சமீபத்தில் நடந்துமுடிந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இத்தகு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்மணி தெரிவிக்கையில்., உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள எனது பாட்டியை பார்க்க எனது கணவர் அனுமதியுடன் தாய் வீட்டிற்கு சென்றிருந்தேன். சில மணி நேரங்களிலேயே எனது கணவர் கைப்பேசி வாயிலாக என்னை அழைத்து வீட்டுக்கு வரும்படி கூறினார். 30 நிமிடங்களில் வீடு திரும்புமாறு என்னிடம் கூறினார், ஆனால் என்னால் 30 நிமிடங்களில் வீடு திரும்ப முடியவில்லை, ஏறக்குறைய 10 நிமிடங்கள் தாமதமாக வீடு திரும்பினேன். ஆனால் அதற்குள்ளாக எனது சகோதரர் கைப்பேசிக்கு அழைப்பு விடுத்து என்னிடம் மூன்று முறை தலாக் கூறினார். எனது கணவரின் இந்த செயல்பாடு எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, என தெரிவித்தார்.


மேலும் தனது கணவரின் இந்த செயல்பாட்டிற்கு தனது மாமியார் உள்பட அவரது குடும்பத்தார் அனைவரும் துணை நிற்பதாகவும், இந்த விவகாரத்தில் அரசாங்கம் தலையிட்டு நல்ல முடிவு பெற்று தர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இல்லையேல் தான் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக அலிகன்ச் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் சார்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. 


முன்னதாக கடந்த டிசம்பர் 27-ஆம் நாள், பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது முத்தலாக் முறைமையை பின்பற்றுவது குற்றச்செயல் எனவும், பின்பற்றும் கணவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் எனவும் மசோதா நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.