புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி 'மான் கி பாத்' நிகழ்ச்சியில் தனது எண்ணங்களை பகிர்ந்து அவை:- 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமர் நரேந்திர மோடி 28- வது 'மான் கி பாத்' நிகழ்ச்சியில் பங்கேற்றார்.


தேர்வை மாணவர்கள் தைரியமாக செய்யல பட வேண்டும். என் வாழ்த்துக்கள் எப்போதும் இருக்கும் என பிரதமர் மோடி கூறினார்.


ஜனவரி 30-ம் தேதி காலை11 மணியளில், மகாத்மா காந்தி மற்றும் மறைந்த ராணுவ வீரர்கள் நினைவாக வருடந்தோறும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும். இது நமது ஒற்றுமையையும் காட்டுவதுடன், நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களை போற்றுவது போல் ஆகும். 


நமது நாடு ராணுவ வீரர்கள், பாதுகாப்புபடையினருக்கு சிறப்பு மரியாதை அளித்து வருகிறது .காஷ்மீரில் உயிர் தியாகம் செய்த வீரர்களை நாம் போற்ற வேண்டும். இளைஞர்கள் அவர்களை முன்மாதிரியாக எடுத்து கொள்ள வேண்டும். 


மாணவர்களுக்கு தேர்வுக்கு முன் நெருக்கடி ஏற்படுகிறது. மாணவர்கள் தேர்வை தைரியமாக அணுக வேண்டும். நல்ல மனநிலை தான் நல்ல மதிப்பெண்களை தரும். 


சிறிது நேரம் ஓய்வெடுப்பது நினைவாற்றலுக்கு சிறந்த மருந்தாகும். வாழ்க்கையின் வெற்றிக்கு தேர்வு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. வாழ்க்கையின் வெற்றி தோல்விக்கு, தேர்வு சிறிதளவு உதவுகிறது. தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வை மிக எளிதாக எதிர் கொள்ள வேண்டும். 


இவ்வாறு அவர் பேசினார்.