கேரளாவில் கனமழை காரணமாக மீட்புப் பணிக்காக ராணுவம், கப்பற்படையிடம் உதவி கேட்பு! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளா-கர்நாடக எல்லை பகுதியில் தொடர்நது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கண்ணூர் மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் அரளம், அய்யங்கண்ணு, கேளகம், உளிக்கல மற்றும் கனிச்சார் பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சாலைகளில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. 
இதனால் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. 


இந்நிலையில், கனமழையால் இதுவரையில் சுமார் 20 பேர் இறந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், சிலரை காணவில்லை எனவும் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இந்த மழை நாளை வரை நீடிக்கும் என்று கொச்சி வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ள நிலையில், மீட்புப் பணிக்காக ராணுவ உதவி கோரப்பட்டுள்ளது. 



ராணுவம், கடற்படை, கடலோர காவல்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையிடமும் உதவி கோரப்பட்டிருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.