இந்தியா நடத்திய ASAT சோதனையால் விண்வெளியில் 270 சிதைந்த துண்டுகள் தேங்கியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விண்ணில் செயற்கைக்கோளை ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கும் நுட்பத்தை இந்திய வெற்றிகரமாக சோதித்துப் பார்த்ததை, கடந்த புதன்கிழமை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.


இந்நிலையில், அமெரிக்க விமானப்படையின் உயரதிகாரியான டேவிட் தாம்ப்சன் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு இது குறித்து அளித்த விளக்கத்தின் போது, சிதைகூளங்களில் 270 துண்டுகளை கண்காணித்து வருவதாகத் தெரிவித்தார். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் குறிப்பிட்டார். இந்த சிதைகூளங்களால் செயற்கைக்கோள்களுக்கு பாதிப்பு நேரக்கூடிய சூழல் ஏற்பட்டால், அந்த செயற்கைக்கோள்களின் உரிமையாளர்களுக்கு உடனடியாக தெரிவிக்கப்படும் என்றும், சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திற்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.


இதனிடையே, செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் சோதனையை நடத்திய இந்தியா, சீனாவைவிட பொறுப்புடன் நடந்து கொண்டுள்ளதாக, அமெரிக்க வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். சிதைகூளங்களின் நிலை, அளவு, தற்போது எவ்வளவு உயரத்தில் உள்ளன ஆகிய விவரங்களை முழுமையாக தொகுத்த பிறகே, அவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து முடிவுக்கு வர முடியும் எனவும் வானியல் அறிஞர் ஜொனாதன் மெக்டவல் கூறியுள்ளார்.