புதுடெல்லி: கொரோனாவுக்கு எதிரான போரில் அடுத்த கட்ட முன்னேற்றமாக, கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரண்டு தடுப்பூசிகளையும் கலந்து பயன்படுத்துவது குறித்து அரசாங்கம் ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (DCGI) கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசி கலவை குறித்த ஆய்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி-சிஎம்சி (Christian Medical College-CMC), வேலூர், இந்த ஆய்வு மற்றும் மருத்துவ சோதனை நடத்தும் பொறுப்பைப் பெற்றுள்ளது.


300 தன்னார்வலர்கள் இந்த ஆய்வில் பங்கு கொள்வார்கள்


எங்கள் பங்குதாரர் இணையதளமான 'India.com' இல் வெளியிடப்பட்ட செய்திகளின்படி, மத்திய மருந்து ஒழுங்குமுறையின் நிபுணர் குழு, ஜூலை 29 அன்று இந்த ஆய்வை நடத்த பரிந்துரைத்தது. இது குறித்து நடந்த சந்திப்பின் போது, ​​வேலூர் சிஎம்சியில் நான்காம் கட்ட மருத்துவ சோதனைக்கு ஒப்புதல் அளிக்க நிபுணர் குழு பரிந்துரைத்தது. இந்த சோதனையில், 300 ஆரோக்கியமான தன்னார்வலர்களுக்கு கோவிட் -19 (COVID-19) தடுப்பு மருந்துகளான கோவாக்சின் மற்றும் கோவ்ஷீல்ட் ஆகிய இரண்டும் அளிக்கப்பட்டு விளைவுகள் சோதிக்கப்படும்.


ALSO READ:Covaxin - Covishield கலந்து கொடுப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: ICMR


இதுதான் ஆய்வின் நோக்கம்


தடுப்பூசி செயல்முறையை முழுமையடையச் செய்ய ஒரு டோஸ் கோவாக்சின் (Covaxin) மற்றும் மற்றொரு டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்த முடியுமா என்பது குறித்த ஆய்வு நடைபெறும். இந்த முன்மொழியப்பட்ட ஆய்வு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நடத்திய சமீபத்திய ஆய்வில் இருந்து வேறுபட்டது. அந்த ஆய்வின் அடிப்படையில், ஐசிஎம்ஆர் கோவாசின் மற்றும் கோவிஷீல்ட் ஆகியவற்றை ஒன்றாகக் கொடுப்பது சிறந்த முடிவுகளைக் காட்டியது என்று கூறியிருந்தது.


தொற்று எண்ணிக்கை அதிகரித்ததால் முழு விழிப்புணர்வுடன் இருக்கிறது அரசு


கொரோனா வைரஸ் பாதிப்பில் அரசு மீண்டும் எச்சரிக்கையாக உள்ளது. பல நாடுகளில், கொரோனாவின் (Coronavirus) டெல்டா மாறுபாடு காரணமாக நோய்த்தொற்றின் வேகம் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதையும் கொரோனா தொற்றின் பாதிப்பில் தள்ளிய சீனாவும் சிக்கலில் உள்ளது.


அங்கு தொற்றுநோயை தடுக்கத் தவறிய அதிகாரிகள் கண்டறியப்பட்டு தண்டிக்கப்படுகிறார்கள். இதுவரை, சுமார் 30 அதிகாரிகள் மீது சீனா நடவடிக்கை எடுத்துள்ளது. சீனாவின் நிலைமை மோசமடைந்து வருவதால், இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் பதற்றத்தில் உள்ளன.


ALSO READ: Johnson & Johnson கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசர கால அனுமதி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR