கொரோனா 3வது அலை ஆகஸ்டில் தொடங்குமா; நிபுணர்கள் கூறுவது என்ன..!!

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையில்  நாள் ஒன்றுக்கு 100,000 முதல் 1,50,000 என்ற அளவிற்கு புதிய கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் பதிவாக வாய்ப்புள்ளது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 2, 2021, 10:00 AM IST
  • கொரோனா 3வது அலையில் நாள் ஒன்றுக்கு 100,000 முதல் 1,50,000 என்ற அளவிற்கு புதிய தொற்று பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு.
  • ஆகஸ்ட் மாதத்தில் COVID -19 தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும்.
  • மூன்றாவது கோவிட் -19 அலை இரண்டாவது அலை போல் தீவிரமாக இருக்க வாய்ப்பில்லை.
கொரோனா 3வது அலை ஆகஸ்டில் தொடங்குமா; நிபுணர்கள் கூறுவது என்ன..!! title=

Corona Third Wave: இந்தியாவில் இரண்டாவது அலை கட்டுக்குள் வந்து விட்ட போதிலும், மூன்றாவது கோவிட் -19 அலை தொடர்பான அச்சுறுத்தல் மக்கள் மத்தியில் நிலவுகிறது.  ஆகஸ்ட் மாதத்தில் COVID -19 தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ள ப்ளூம்பெர்க் அறிக்கை எச்சரித்துள்ளது.

ஐஐடி ஹைதராபாத் மற்றும் கான்பூரை சேர்ந்த ஆராய்ச்சியாளரின் கருத்தை மேற்கோள் காட்டி, இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையில்  நாள் ஒன்றுக்கு 100,000 முதல் 1,50,000 என்ற அளவிற்கு புதிய கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் பதிவாக வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது

இதற்கிடையில், பல ஆராய்ச்சியாளர்கள் மூன்றாவது COVID-19 அலை இரண்டாவது  அலை போல் தீவிரமாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளனர்,. இரண்டாவது  அலையின் போது நாட்டில் 400,000-க்கும் அதிகமான தினசரி தொற்று பாதிப்புகள் பதிவாகின. 

Also Read | COVID-19 Update August 01: இன்றைய கொரோனா பாதிப்பு 1,990; 26 பேர் உயிரிழப்பு

எனினும், ஜுலை மாதம் நடுவில் கோவிட் -19 அலை உச்சத்தை எட்டும் என்று ஏப்ரல் மாதம் வித்யாசாகர் கூறிய கணிப்பு தவறானது என்பதையும் அந்த அறிக்கையில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக, மருத்துவ வல்லுநர்கள் COVID-19  டெல்டா திரிபு வைரஸ், தடுப்பூசி போடப்பட்ட மக்கள் மூலமாகாவும் பரவும்  என்றும் எச்சரித்தனர்.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 41,831 புதிய COVID-19 தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்றும்,  நாட்டினல் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை இப்போது 4.10 லட்சமாக அதிகரித்துள்ளது என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை மொத்த  தொற்று பாதிப்பில், 1.30 சதவிகிதம் என்று சுகாதார அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 541 பேர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இறந்தனர். 39,258 பேர் குணமடைந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை 4,24,351 ஆக உயர்ந்துள்ளது, மொத்தம் 3,08,20,521 பேர் தொற்றுநோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.

ALSO READ | தமிழகத்தில் ஆகஸ்ட் 9 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது: முதல்வர் மு.க. ஸ்டாலின்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News