பிரதமர் நரேந்திர மோடி அரச முறை பயணமாக ஐரோப்பா நாடுகளுக்கு சென்றிருந்தார்.அதன்படி கடந்த இரண்டாம் தேதி ஜெர்மனி சென்ற அவர் அந்நாட்டு பிரதமர் ஓலப் ஸ்கால்சை சந்தித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின்னர் இருநாடுகளுக்கிடையே 9 ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக தெரிகிறது. அதன்பிறகு ஜெர்மனி தலைநகர் பெர்லினில் பாட்ஸ்டேமர் பிளாட்ஸில் உள்ள திரையரங்கு ஒன்றில் புலம்பெயர் இந்தியர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அங்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக ‛2024 மோடி ஒன்ஸ்மோர்' என கோஷங்கள் எழுப்பப்பட்டன.


இதற்கிடையில் பிரதமர் மோடியும் ஜெர்மனிய பிரதமர் ஓலப் ஸ்கால்சினும் உரையாடிக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது. ஆனால் அதில் நேருவின் புகைப்படம் அங்குள்ள சுவற்றில் மாட்டப்பட்டிருப்பது போல் தெரிந்தது.


இதையடுத்து ஜெர்மனியில் நேருவின் புகைப்படம் மாட்டப்பட்டுள்ளது எனறால் உலக நாடுகளில் நேருவின் புகழ் பரவியுள்ளது என காங்கிரஸாரும், இணையதள வாசிகளும் பெருமையாக பதிவுகளை பகிர்ந்து வந்தனர்.



அப்போது பாஜகவின் டுவிட்டர் பக்கத்தில் இது குறித்த பதிவு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் நேருவின் புகைப்படம் அங்கு போட்டோஷாப் செய்து ஒட்ட வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் புரளிகள் ஓய்ந்தன.


மேலும் படிக்க | எருமை மாடும்தான் கருப்பு அதுக்காக அது திராவிடரா? சீமான் கேள்வி


இவ்வாறு மோடியின் அனைத்து செயல்களிலும் ஒரு புரளி கிளம்பி பின் அடங்கி வருவது வழக்கமாக இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, ஜெர்மனியில் ஒரு பிரம்மாண்ட கட்டிடத்தில் இருந்து வெளியே வந்த பிரதமர் மோடி அங்கு காத்திருந்த இந்திய ஊடகத்துறையினரைப் பார்த்து "ஓ மை காட்" என்று கூறியது போலவும், செய்தியாளர்களை தவிர்த்துவிட்டு விரைத்து சென்றது போலவும் காட்சிகள் வெளியாகின.


இக்காட்சிகள் பெரும் சர்ச்சையை எழுப்பின. பேச்சு கலையில் அடித்துக்கொள்ள ஆளில்லை என்பது போல் பேசி உலாவரும் மோடி செய்தியாளர்களை கண்டு ஏன் அஞ்சி ஓடினார் என பலர் தங்களின் கருத்துகளை பகிர்ந்து வந்தனர்.


இந்நிலையில், அந்த காட்சிகளின் முழு வீடியோ வெளியாகியுள்ளன. அதில்  பிரதமர் மோடி, "எல்லாரும் வெளியே உள்ளீர்களே, உள்ளே வர அனுமதி கிடைக்கவில்லையா?" என கேட்டுள்ளார். அதற்கு செய்தியாளர்கள் இல்லை என பதிலளித்தனர். அப்போது "ஓ மை காட்.. ஏன் இப்படி நடந்தது என நான் விசாரிக்கிறேன், நீங்கள் உங்கள் ஆரோக்யத்தை பார்த்துக்கொள்ளுங்கள்." என பேசியுள்ளார்.


 



இந்த முழு வீடியோவை வெட்டி சிறு பகுதிகளை மட்டும் இணைத்து செய்தியாளர்களைக் கண்டு மோடி அதிர்ச்சியுற்றது போல் சித்தரிக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது.


இந்த மோடியின் முழு விடியோவும் தற்போது வைரலாக பரவி வருகிறது.


மேலும் படிக்க | தமிழக ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்; மயிலாடுதுறையில்ன் பரப்பரப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR