கொரோனாவை சிறப்பாக கையாள்கிறது இந்தியா.. 70 சதவிகித மக்கள் நம்பிக்கை..!!!
70 சதவீதம் இந்தியர்கள் COVID-19 ஐ எதிர்த்துப் போராடுவதில் இந்தியா வெற்றிகரமாக இருப்பதாக நம்புகிறார்கள்.
கொரோனா தொற்று உலகையே ஆட்டிப்படைக்கிறது. வளர்ந்த நாடுகளே, கொரோனாவை எதிர்த்து போராடுவதில் தடுமாறியதை பார்க்கின்றோம்.
இந்நிலையில் 70 சதவீதம் இந்தியர்கள் COVID-19 ஐ எதிர்த்துப் போராடுவதில் இந்தியா வெற்றிகரமாக இருப்பதாக நம்புகிறார்கள்.
கொரோனா வைரஸ் நெருக்கடியை இந்தியா எவ்வாறு கையாள்கிறது என்பதைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள நடத்தப்பட்ட ஆய்வில், 8 லட்சம் பேர் பங்கேற்றனர்.
COVID-19 தொற்று நோய் அதிவேகமாக பரவி வரும் இந்த நேரத்தில், இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
ALSO READ | பின் தூங்கி பின் எழும் பழக்கம் உள்ளவரா…. ஆஸ்துமா, அலர்ஜி வரும் ஜாக்கிரதை..!!!
கோவிட் -19 க்கு எதிராக இந்தியா வெற்றிகரமாக போராடி வருவதாக 70 சதவீத மக்கள் நம்புகின்றனர், இந்தியாவில் 300 மாவட்டங்களில் இருந்து 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கொரோனா வைரஸ் பரவுவதற்கு ஒரு முக்கிய காரணம் அரசு லாக்டவுன் விதிமுறையை தளர்த்தியது என்று 18.18 சதவீதம் பேர் மட்டுமே கூறியுள்ளனர், அவர்களில் 60 சதவீதம் பேர் வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணம் மக்களின் கவனக்குறைவு தான் என்று கூறுகின்றனர்.
தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் தீர்வை நோக்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பரவல் அதிகரித்தபோது தகுந்த அளவில் பரிசோதனை நடக்கவில்லை என்று, 12.34 சதவீதம் பேரும், சிகிச்சை வசதிகள் போதவில்லை என 9.34 சதவிகிதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் 59.50 சதவீதம் பேர் மக்களின் கவனக்குறைவு காரணமாக இந்தியாவில் தொற்றுநோய் பரவுவதாக நம்புகின்றனர். 18.30 சதவீதம் பேர் லாக்டவுன் விதிமுறைகளில் கொடுக்கப்பட்ட தளர்வு காரணம் எனக் கூறினர், 13.17 சதவீதம் பேர் தகுந்த அளவில் பரொசோதனை செய்யப்படவில்லை என்றும், 9.04 சதவீதம் பேர் , சிகிச்சை வசதிகள் போதுமான அளவு இல்லை என்றும் கூறியுள்ளனர்.
பீகாரில், 55.21 சதவீதம் பேர் மக்களின் கவனக்குறைவு தான் காரணம் கூறினர், 15.77 சதவீதம் பேர் லாக்டவுன் விதிமுறைகளில் கொடுக்கப்பட்ட தளர்வு தான் பரவல் அதிகரிப்பதற்கான காரணம் எனக் கூறினர். 14.17 சதவீதம் பேர் பரவல் தொடங்கிய காலத்தில், பரிசோதனை அதிக அளவில் செய்யப்படவில்லை என கருதினர். சிகிச்சை வசதிகள் இல்லாததால் பரவல் அதிகரித்துள்ளது என 14.17 சதவீதம் பேர் கூறினர்.
ALSO READ | தினமும் உணவில் வெங்காயம்..... சர்க்கரை நோய் சரியாகும்..!!!
மத்திய பிரதேசத்தில், 61.64 சதவீதம் பேர் மக்களின் கவனக்குறைவு தான் காரணம் எனக் கூறினர். 19.47 சதவீதம் பேர் லாக்டவுன் விதிமுறைகளில் கொடுக்கப்பட்ட தளர்வு தான் பரவல் அதிகரிப்பதற்கான காரணம் எனக் கூறினர். 11.52 சதவீதம் பேர் பரவல் தொடங்கிய காலத்தில், பரிசோதனை அதிக அளவில் செய்யப்படவில்லை என கருதினர். சிகிச்சை வசதிகள் இல்லாததால் பரவல் அதிகரித்துள்ளது என 14.17 சதவீதம் பேர் கூறினர்.
டெல்லியில், 58.62சதவீதம் பேர் மக்களின் கவனக்குறைவு தான் காரணம் எனக் கூறினர். 18.17 சதவீதம் பேர் லாக்டவுன் விதிமுறைகளில் கொடுக்கப்பட்ட தளர்வு தான் பரவல் அதிகரிப்பதற்கான காரணம் எனக் கூறினர். 14.55 சதவீதம் பேர் பரவல் தொடங்கிய காலத்தில், பரிசோதனை அதிக அளவில் செய்யப்படவில்லை என கருதினர். சிகிச்சை வசதிகள் இல்லாததால் பரவல் அதிகரித்துள்ளது என 8.66 சதவீதம் பேர் கூறினர் .
ஒரு செயலியின் மூலம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.