என்.எஸ்.ஜி. எனும் அணுசக்தி வழங்கும் குழுமத்தில் உறுப்பு நாடாக சேர வேண்டும் என்பது இந்தியாவின் கனவு. இதற்கான முயற்ச்சி இந்திய மேற்கொண்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த அமைப்பில் மொத்தம் 48 நாடுகள் உறுப்பினராக உள்ளது. இந்த அமைப்பில் உறுப்பு நாடாக சேர வேண்டும் என்றால் 48 நாடுகளும் ஆதரிக்க வேண்டும். அதாவது 48 நாடுகளுக்கும் மறுப்பு ஓட்டு அதிகாரம் உள்ளது. ஒரு நாடு மறுத்து விட்டாலும் உறுப்பினர் ஆக முடியாது என்ற நிலை உள்ளது.


இந்த அமைப்பில் இந்தியா சேருவதற்கு அமெரிக்கா தனது உறுதியான ஆதரவை தெரிவித்துள்ளது. எதிர்ப்பு குரல் கொடுத்து வந்த மெக்சிகோ, சுவிட்சர்லாந்து நாடுகளும் கூட இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன. ஆனால் சீனா தனது எதிர்ப்பு நிலையில் உறுதியாக இருப்பதாக வியன்னாவில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.


இந்தியா உள்ளிட்ட நாடுகளின் விண்ணப்பங்கள் குறித்து நேற்று வியன்னாவில் நடந்த ஆலோசனையில் இந்தியாவுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை சீனா மேலும் இறுக்கிக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சீனாவுடன் நியூசிலாந்து, அயர்லாந்து, துருக்கி, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளும் இந்தியா உறுப்பினர் ஆவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக வியன்னாவில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.


என்.எஸ்.ஜி. அமைப்பின் பேரவை கூட்டம் வரும் 20-ம் தேதி வியன்னாவில் நடக்கிறது. அப்போதுதான் இந்தியாவின் விண்ணப்பம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். இந்தியா இதில் உறுப்பினர் ஆவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரியவில்லை.


எதிர்ப்பு தெரிவிக்கும் சீனா உள்ளிட்ட நாடுகள் இறங்கி வந்து ஆதரவு தெரிவித்தால் மட்டுமே என்.எஸ்.ஜி.யில் இந்தியா உறுப்பினர் ஆக முடியும்.