குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் உலகின் மிகபெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான மொடேரா மைதானத்தை திறந்து வைத்து, அதற்கு நரேந்திர மோடி ஸ்டேடியம் என்று பெயர் சூட்டியுள்ளார்
இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டி இன்று இந்த மைதானத்தில் நடைபெறும், இது பகலிரவு ஆட்டம் ஆகும், குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் புதன்கிழமை பகல்-இரவு டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பு கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியக் குடியரசுத் தலைவர் அதிகாராபூர்வமாக பிரதமர் நரேந்திர மோடியின் (PM Narendra Modi) பெயரை அகமதாபாத் ஸ்டேடியத்துக்குச் சூட்டியுள்ளார்.


புதிதாக புதுப்பிக்கப்பட்ட மொடேரா ஸ்டேடியத்தை திறந்து வைக்கும் போது குடியரசுத்தலைவர்  'பூமி பூஜை' நிகழ்த்தினார். உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தின் திறப்பு விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிசிசிஐ செயலாளர் ஜே ஷா மற்றும் விளையாட்டு அமைச்சர் கிரென் ரிஜிஜு ஆகியோர் கலந்து கொண்டனர்.


உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) கூறுகையில், "மொடெராவில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் ஸ்போர்ட்ஸ் என்க்ளேவ் மற்றும் நரேந்திர மோடி ஸ்டேடியத்துடன், நாரன்புராவிலும் ஒரு விளையாட்டு வளாகம் கட்டப்படும். இந்த 3  மைதானங்களும் சர்வதேச விளையாட்டு போட்டிகளை நடத்தும் வகையில் சிறந்த தரம் மற்றும் வசதியை கொண்டிருக்கும். அகமதாபாத் இந்தியாவின் 'விளையாட்டு நகரம்' என்று புகழை அடையும் என தெரிவித்தார்.



கடந்த மாதம் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்து கொண்ட காரணத்தினால், பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலி, திறப்பு விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. அவர் தனது டிவிட்டர் கணக்கில், இந்த திட்டம் மூலம் ஒரு கனவு நன்வாகியது எனவும், விழாவில் கலந்து கொள்ள இயலாததை, நான் அதை மிஸ் செய்கிறேன் என பதிவிட்டுள்ளார். 



இந்த மைதானத்தில் 1,10,000 பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் திறன் கொண்ட மொடேரா ஸ்டேடியம் 63 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது, மொத்தம் 76 கார்ப்பரேட் பெட்டிகள், ஒரு ஒலிம்பிக் போட்டிக்கான நீச்சல் குளம், ஒரு உட்புற அகாடமி, விளையாட்டு வீரர்களுக்கான நான்கு ஆடை அறைகள் மற்றும் உணவு கூடங்கள் உள்ளன.


ALSO READ | ToolKit case: திஷா ரவிக்கு ஜாமீன் அளித்தது தில்லி நீதிமன்றம்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR