ToolKit case: திஷா ரவிக்கு ஜாமீன் அளித்தது தில்லி நீதிமன்றம்

போராட்டத்தின் ஒரு பகுதியாக, குடியரசு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட டிராக்டர் பேரணியில், வன்முறை வெடித்ததோடு, செங்கோட்டையில் காலிஸ்தான் கொடி ஏற்றப்பட்டது.    

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 23, 2021, 09:23 PM IST
  • காலிஸ்தான் ஆதரவாளர்களுடன் இணைந்து இந்தியாவில் கலவரத்தை தூண்ட சதி செய்ததாக போலீஸார் திஷா ரவியை கைது செய்தனர்.
  • டூல் கிட் தொடர்பாக ஆலோசனை செய்த வாட்ஸ் அப் க்ரூப் தகவல்களும் கசிந்தன.
  • ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ட்வீட் செய்திருந்தார்.
ToolKit case: திஷா ரவிக்கு ஜாமீன் அளித்தது தில்லி நீதிமன்றம் title=

டெல்லி: விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை சம்பவம், மற்றும் அதில் இருந்த சர்வதேச சதி தொடர்பான  டூல்கிட் வழக்கில், தில்லி நீதிமன்றம்  வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுற்றுசூழல் ஆர்வலர் திஷா ரவிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  போராட்டத்தின் ஒரு பகுதியாக, குடியரசு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட டிராக்டர் பேரணியில், வன்முறை வெடித்ததோடு, செங்கோட்டையில் காலிஸ்தான் கொடி ஏற்றப்பட்டது.  

இந்த விவசாயிகள் போராட்டத்திற்கு (Farmers Protest) ஆதரவாக பல்வேறு சர்வதேச பிரபலங்களும் ஆதரவாகக் கருத்து தெரிவித்தனர். அதன்படி ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ட்வீட் செய்திருந்தார். 

அந்த ட்வீட்டில், அவர் கவனக்குறைவாக டூல்கிட் லிங்க் ஒன்றை பகிர்ந்திருந்தார்.  அதில், விவசாயிகள் போராட்டத்தை எப்படி நடத்த வேண்டும், என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து தெளிவாக விளக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்தியாவில் (India)  கலவரத்தை தூண்டும் சர்வதேச சதி அமபலமாகியது.

டூல்கிட்டிற்கும் விளக்கப்பட்டிருந்த விஷயங்களின் அடிப்படையில், குடியரசு தின வன்முறை சம்பவத்திற்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி, தில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். டூல் கிட்தொடர்பாக ஆலோசனை செய்த வாட்ஸ் அப் க்ரூப் தகவல்களும் கசிந்தன.

ALSO READ | Greta Thunberg toolkit case: பெங்களூருவின் 21 வது சுற்றுசூழல் ஆர்வலர் கைது..!!

மேலும், காலிஸ்தான் ஆதரவாளர்களுடன் இணைந்து இந்தியாவில் கலவரத்தை  தூண்ட சதி செய்ததாக திஷா ரவியை கடந்த வாரம் பெங்களூருவில் தில்லி போலீசார் கைது செய்தனர். பிப்ரவரி 13ம் தேதி முதல் அவர் போலீஸ் காவலில் உள்ள நிலையில்,  திஷா ரவி ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனு மீது இன்று  விசாரணை நடத்திய தில்லி பாட்டியாலா நீதிமன்றம்  திஷா ரவிக்கு ஜாமீன் வழங்கியது.

ஆனால், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும், விசாரணைக்கு கூப்பிடும் போது ஆஜராக வேண்டும் எனவும், நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல், நாட்டை விட்டு வெளியேறக் கூடாது எனவும் உத்தரவிட்டது.

ALSO READ | 'Toolkit ' விவகாரம்: டெல்லி காவல்துறை அம்பலடுத்தியுள்ள பகீர் தகவல்கள்..!!!
 

Trending News