COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தோசா பிளாசா (Dosa Plaza) என்ற உணவக சங்கிலியை நிறுவியவர் பிரேம் கணபதி. நாட்டின் பிரபலமான தொழில்முனைவோர் மத்தியில் அவரது பெயர் மிகவும் பிரபலம். கையில் வெறும் 200 ரூபாயுடன் சென்னையில் இருந்து மும்பை வந்துள்ளார். அவரது கடின உழைப்பும், வேலையின் மீதான ஆர்வமும் அவரை கோடீஸ்வரனாக்கியது. பிரேம் கணபதி தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் பிறந்தார். 10ம் வகுப்பு முடித்த பிறகு, அவர் மனம் படிப்பில் ஈடுபடவில்லை என்பதால், வேறு ஏதேனும் செய்ய ஆசைப்பட்டார். அத்தகைய சூழ்நிலையில், அவர் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தார். வேலை தேடி சென்னைக்கு வந்தார். பிரேம் கணபதி சென்னையில் பல வேலைகள் செய்தார். ஆனால், அவர் பேர் சொல்லும் படி ஏதாவது செய்து சாதிக்க விரும்பினார். அதனால், சில வருடங்கள் கழித்து சென்னையை விட்டு வெளியேறினார். பெரிய கனவுகளுடன், அவர் மும்பைக்கு வந்தார்.


2002 ஆண்டில் தொடங்கப்பட்ட தோசை பிளாசா


பிரேம் 2002 ஆம் ஆண்டில் சென்டர் ஒன் மாலில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்தார். அதற்கு 'தோசா பிளாசா' என்று பெயரிட்டார். இங்குதான் தோசை பிளாசா தொடங்கியது. வணிக வளாகத்தில் பெரும் வெற்றியைப் பெற்ற பிறகு, பிரேம் கணபதி தனது புதிய திட்டங்கள் மற்றும் யோசனைகளுடன் முன்னேறத் தயாராகிவிட்டார். அவர் தனது நிறுவனத்தின்  உணவக சங்கிலியை நாடு முழுவதும் விரிவுபடுத்தினார். அவரது முயற்சிகள் மற்றும் உத்திகளால், அவர் தனது வணிகத்தில் புதிய உயரங்கலை தொட்டார்.


மேலும் படிக்க |  விஜய் மல்லையாவிடம் நிறுவனத்தை வாங்கி வேற லெவலில் வெற்றி கண்ட அபூர்வ சகோதரர்கள்!!


மும்பையில் பாத்திரம் கழுவும் வேலை கிடைத்தது


முன்னதாக, பிரேம் கணபதிக்கு மும்பை வந்த உடன் உள்ள மஹிம் பேக்கரியில் மாதம் 150 ரூபாய்க்கு பாத்திரம் கழுவும் வேலை கிடைத்தது. அந்த வேலையை அவர் ஏற்றுக்கொண்டார். பாத்திரங்களை கழுவி வேலை செய்து கொஞ்சம் பணத்தை மிச்சப்படுத்தினார். இந்தப் பணத்தைக் கொண்டு ரயில் நிலையம் அருகே தோசை தயாரிக்கும் புதிய தொழிலைத் தொடங்கினார். இதில் ரூ.1500 முதலீடு செய்தார். அவரது தோசை, அதில் செய்த புதுமைகள்,  வாடிக்கையாளர்களுக்கு பிடித்திருந்தது. சிறிது நேரத்தில் அப்பகுதியில் பிரபலமடைந்தார். அவரது உறுதியும் கடின உழைப்பும் அவரை ஒரு நல்ல தொழிலதிபராக மாற்றியது.


வெரைட்டி தோசைகளை அறிமுகம் செய்து புதுமை 


மும்பை  ரயில் நிலையம் அருகே ஒரு கடையை வாடகைக்கு எடுத்து தோசை விற்பனை செய்து வந்த  பிரேம், மெல்ல மெல்ல ஒரு நல்ல தொழிலை நடத்துவதற்கான அனைத்து உத்திகளையும் அறியத் தொடங்கினார்.  கடைக்கான வாடகை கட்டணம் 5000 ரூபாய். சில ஊழியர்களையும் தக்க வைத்துக் கொண்டார். வாடிக்கையாளர்களை கவர, விதவிதமான தோசைகளை தயாரிக்க ஆரம்பித்தார். இதில் ஷெஸ்வான் தோசை, பன்னீர் மிளகாய் தோசை மற்றும் பல வகைகள் அடங்கும். பின்னர் மேலும் 26 புதிய வகை தோசைகளை அறிமுகப்படுத்தினார். இதன் காரணமாக அவர் மேலும் பிரபலமடைந்தார். அதன் பிறகு அவர் வாழ்க்கையில் தோல்வியை பார்க்கவே இல்லை. முன்னேறி பெரிய ஆளுமையாக மாற வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு இருந்தது.


கையில் 200 ரூபாயுடன் மும்பையை அடைந்த ப்ரேம் கணபதி


பிரேம் கணபதி 1990-ம் ஆண்டு மும்பைக்கு வேலைக்கு ஏற்பாடு செய்த ஒருவருடன் வந்தார். கையில் 200 ரூபாயுடன் மும்பையை அடைந்தார். தற்செயலாக, பாந்த்ரா நிலையத்தில் அவரது லக்கேஜ் பை கொள்ளையடிக்கப்பட்டது. ஆனால், நம்பிக்கையை கைவிடாமல் தனது இலக்கை நோக்கி முன்னேறி இன்று வாழ்க்கையில் மிஅக்ப்பெரிய உயரத்தை எட்டியுள்ளார்.


மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கு நிதியமைச்சரின் முக்கிய அறிவிப்பு! மாதம் ரூ.20500 கிடைக்கும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ