பிரதமர் மோடியே வெற்றிக்கு காரணம்! காரணங்களை அடுக்கும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்
Madhya Pradesh results: மத்தியப் பிரதேச தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, அதிக இடங்களில் முன்னிலை பெற்றதற்காக பிரதமர் மோடிக்கு சிவராஜ் சிங் சவுகான் பாராட்டு தெரிவித்துள்ளார்
தேர்தல் முடிவுகள் 2023: தெலுங்கானாவில் காங்கிரஸ் பெரும் முன்னிலை பெற்றது. இருப்பினும், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பின்தங்கியுள்ளதாகத் தெரிகிறது. 2023 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் செயல்திறனுக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் புகழாரம் சூட்டினார்.
மாநிலத்தில் மொத்தமுள்ள 230 இடங்களில் காங்கிரஸ் கட்சி 68 இடங்களைப் பெற்ற நிலையில், 160 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதே நிலை நீடித்தால் பாஜக அமோக வெற்றி பெறும். அதே நேரத்தில் ராஜஸ்தானில் பாஜக 120 இடங்களிலும், காங்கிரஸ் 64 இடங்களிலும் முன்னணியில் உள்ளன.
இந்த நிலையில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், மோடியின் பொதுக்கூட்டங்கள் மக்களின் இதயங்களைத் தொட்டதாக சிவராஜ் சிங் சவுகான் கூறினார். மேலும், பிரதமர் மோடியின் இதயத்தில் மத்தியப் பிரதேச மாநிலமும், மாநிலத்தின் மனதில் பிரதமர் மோடி இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும் படிக்க | முழு பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரும் பாஜக! எந்த மாநிலம் தெரியுமா?
"பிரதமர் மோடி இங்கு பொதுக்கூட்டங்களை நடத்தினார், மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார், அது மக்களின் இதயங்களைத் தொட்டது. அதன் விளைவுதான் மத்தியப் பிரதேச மாநிலத்தில் எதிரொலிக்கிறது. இரட்டை இயந்திர அரசு, மத்திய அரசின் திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தியது, மாநிலத்தில் உருவாக்கப்பட்ட திட்டங்களும் மக்களின் இதயங்களைத் தொட்டன. மத்தியப் பிரதேசம் குடும்பமாக மாறியது... மக்கள் நம் மீது வைத்திருக்கும் அன்பு எல்லா இடங்களிலும் தெரிவதால், பாஜகவுக்கு வசதியாகவும், பெரும்பான்மையும் கிடைக்கும் என்று நான் முன்பே கூறியிருந்தேன்" என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் செய்தியாளர்களிடம் கூறினார்.
தெலுங்கானாவில் காங்கிரஸ் அமோக முன்னிலை பெற்றுள்ளது. சத்தீஸ்கரில், முன்னணி இடங்களைப் பெற்றிருந்தாலும், காங்கிரஸ் பாஜகவை விட பின் தங்கியிருக்கிறது.
மேலும் படிக்க | Rajasthan Election Results 2023: ராஜஸ்தானில் ஆட்சி யாருக்கு?
மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 157 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. ஏற்கனவே மாநிலத்தில் பாஜகவின் ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. தெலுங்கானாவில் தற்போது ஆட்சியில் இருக்கும் சந்திரசேகர் ராவின் பாரத் ராஷ்டிர சமிதி 43 இடங்களில் முன்னணியில் இருக்கும் நிலையில், பாஜக 9 இடங்களிலும், காங்கிரஸ் 64 இடங்களிலும் முன்னிலை பெற்று அபார வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது.
மத்தியப் பிரதேசத்தில் 2018 இல் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக இருந்தது. பின்னர் எம்எல்ஏக்களின் கிளர்ச்சியால் 15 மாதங்கள் மட்டுமே நீடித்த அரசாங்கத்தை காங்கிரஸ் தலைவர் கமல்நாத் அமைத்தார். அதன் பிறகு சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது.
மேலும் படிக்க | Rajasthan Election Results 2023: காங்கிரஸ் வென்றால்... முதல்வர் பதவி யாருக்கு?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ