மத்தியப் பிரதேசத்தின் ஷாதுல் மாவட்டத்தில் உள்ள அரசின் பழங்குடியின நலத்துறை சார்பில் நடத்தப்படும் தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் 10 வயதான பழங்குடியின சிறுமி, ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.  அந்த 10 சிறுமியின் உள்ளாடை மட்டும் அணிந்து வகுப்பறையில் அனைத்து மாணவர்களின் மத்தியில் அமர்ந்திருக்கும் புகைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அப்பகுதியினர் மத்தியில் பகிரப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதைத் தொடர்ந்து, அதிர்ச்சியடைந்த அக்கிராமத்தினர்கள் ஆசிரியரின் செயலைக் கண்டு கோபமடைந்தனர். இதுதொடர்பாக, பழங்குடியின நலத்துறை உதவி ஆணையர் ஆனந்த் ராய் சின்ஹா கூறுகையில்,"மாணவியின் புகைப்படம் வெளியான நிலையில், அதில் தொடர்புடைய ஆசிரியர் சனிக்கிழமை (நேற்று) அன்று பணியிடை நீக்கம் செய்யப்ட்டார்" என்றார்


மேலும் படிக்க | ஆசிரியரை 3 முறை துப்பாக்கியால் சுட்ட மாணவர் - சண்டைப்போட்டதற்கு கண்டித்ததால் வெறிச்செயல்


இதுகுறித்து மேலும், அவர் கூறுகையில்,"அந்த பெண்ணின் சீருடை புழுதியால் அழுக்காகியுள்ளது. அதைத் தொடர்ந்து, அனைத்து மாணவர்கள் மத்தியிலும் சிறுமியின் சீருடையை அகற்ற கூறியுள்ளார். தொடர்ந்து, சிறுமியின் சீருடையை அவர் தண்ணீர் அலசி துவைத்து காய வைத்துள்ளார். பழங்குடியின நலத்துறை அதிகாரிகளின் வாட்ஸ்அப் குரூப்பில், சம்பவத்தின் புகைப்படத்தை பதிவிட்டு தன்னை தானே 'சுத்தத்திற்கான தன்னார்வலர்' என்று குறிப்பிட்டுள்ளார்" எனத் தெரிவித்தார். இதை்த் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் மாணவியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. 


மேலும், அந்த மாணவி வெறும் உள்ளாடையுடன் 2 மணிநேரத்திற்கு அந்த வகுப்பறையில் அமரவைக்கப்பட்டுள்ளார் எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | 'என்னை விபச்சாரியாக்க முயல்கிறார்கள்' - கொலை செய்யப்பட்ட உத்தரகாண்ட் பெண்ணின் மெசேஞ் சிக்கியது...


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ