புதுடில்லி: கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, அமராபலி நிறுவனத்திடம் இருந்து 39 கோடி ரூபாயை மீட்டு தரவண்டும் எனக்கூறி உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த மனுவில் 2009 ஆம் ஆண்டு முதல் 2016 வரையிலான காலப்பகுதியில் அமராபலி நிறுவனத்தின் பிராண்ட் தூதராக எம்.எஸ். தோனி இருந்தார். அப்பொழுது தோனிக்கு தர வேண்டிய தொகையை அவர்கள் தரவில்லை. அமராபலி நிறுவனம் 38.95 கோடி ரூபாய் தரவேண்டும். அதாவது ரூ. 22.53 கோடி அசல் தொகையும், ரூ. 16.42 கோடி வட்டியும் சேர்ந்து வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு உள்ளனர். மேலும் இதனுடன் ஒப்பந்த ஆவணமும் இணைக்கப்பட்டு உள்ளது.


ஏற்கனவே அமராபலி நிறுவனத்தின் மீதான மற்றொரு வழக்கு உச்ச நீதிம்னற்றத்தில் இருப்பதால், அதனுடன் சேர்ந்து தோனியின் வழக்கும் விசாரிக்கப்படும் எனத் தெரிகிறது.