சோகம்: ராஜஸ்தானில் 18 மாத குழந்தைக்கு கருப்பு பூச்சை பாதிப்பு
ராஜஸ்தான் மாநிலம் பிகார்னர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒன்றரை வயது குழந்தைக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியா முழுவதும் இரண்டாம் அலை காரணமாகக் கடந்த சில வாரங்களாகவே வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் கொரோனாவிலிருந்து (Coronavirus) மீண்டு வருபவர்களை கருப்பு பூஞ்சை (Black Fungus) என்ற புதிய தொற்று தாக்குவதாக செய்திகள் வெளியாகின. இந்த கருப்பு பூஞ்சை நோய்த்தொற்றால் பாதிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இந்த புதிய வகை வைரஸ் காரணமாக தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் உயர்பலிகளும் நிகழ்ந்துள்ளது.
ALSO READ | இந்த மருந்தை அளவுக்கதிகமாக உட்கொண்டால் கருப்பு பூஞ்சை பரவும் அபாயம் ஏற்படுமா
இந்த பூஞ்சை அனைவரையும் பாதிக்காது, ஆனால் ஆரோக்கிய பிரச்சினைகள் மற்றும் கொமொர்பிடிட்டிகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு இது மிகவும் தீவிரமானதாக பாதிக்கும். உயர் இரத்த சர்க்கரை அளவு அல்லது கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இப்போது எந்த வகையான பூஞ்சை தொற்றுகளும் தாக்குவதற்கான அதிக ஆபத்து உள்ளது. மேலும் கருப்பு பூஞ்சை பெரும்பாலானவை COVID-19 இலிருந்து மீண்ட அல்லது COVID-19 சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளுடன் பிணைக்கப்பட்டுள்ளன. COVID-19 முக்கிய உறுப்பு சிக்கல்களுக்கும் வழிவகுக்கும் என்பதால், இந்த கட்டத்தில் மியூகோமைகோசிஸ் போன்ற தொற்றுநோய்கள் தாக்கும் பெரிய ஆபத்து உள்ளது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் பிகார்னர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒன்றரை வயது குழந்தைக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் குழந்தைக்கு இணை நோய்கள் ஏதும் இல்லாத நிலையில் கருப்பு பூஞ்சை நோய் பாதித்து இருப்பது மருத்துவர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கொரோனாவில் இருந்து மீண்டவர்களையே இந்த நோய் அதிகமாக தாக்கும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது குழந்தைக்கு பாதிப்பு உறுதியாகி இருப்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR