மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சரும், அஜித் பவார் தலைமையிலான என்சிபி தலைவருமான பாபா சித்திக் மும்பையில் சனிக்கிழமை மாலை சுட்டுக் கொல்லப்பட்டார். பாந்த்ராவின் நிர்மல் நகரில் கோல்கேட் மைதானத்திற்கு அருகில் உள்ள அவரது மகன் ஜீஷன் சித்திக் (எம்எல்ஏ) அலுவலகத்திற்கு வெளியே சிலர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் 3 முதல் 4 பேர் கொண்ட கும்பல் இருந்ததாகவும், மொத்தம் 3 குண்டுகள் சித்திக் உடலில் இருந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. துப்பாக்கி சூடு நடைபெற்ற உடனேயே சித்திக் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அவருக்கு கொலை மிரட்டல் வந்ததால் சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சஹாரா பாலைவனத்தில் ஏற்பட்ட வெள்ளம்! 50 ஆண்டுகளில் இதுவே முதல்முறை!


யார் இந்த பாபா சித்திக்?


பாபா சித்திக் பிரபலமான அரசியல்வாதி மற்றும் சமூக சேவகராக அறியப்பட்டவர். அவர் தனது பகுதிகளில் உள்ள மக்களுக்கு நிறைய உதவிகளை செய்துள்ளார். மேலும் மக்களின் நல்வாழ்வுக்கான பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார். பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பாபா சித்திக். அவர் இளம் வயதிலேயே இந்திய தேசிய மாணவர் சங்கம் என்ற மாணவர்களுக்கான குழுவில் சேர்ந்து அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். பின்னர், மும்பை மாநகராட்சியில் முனிசிபல் கார்ப்பரேட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாபா சித்திக் 1999 முதல் 2009 வரை தொடர்ச்சியாக மூன்று முறை வந்தேரே மேற்கு விதான் சபா தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் உணவு, தொழிலாளர் மற்றும் சிவில் சப்ளை துறையின் அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். 



பிப்ரவரியில், அவர் காங்கிரஸ் கட்சியில் தனது முக்கிய பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். "சமையலில் கறிவேப்பிலை எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பது போல் காங்கிரஸ் கட்சியில் நான் இருந்தேன். காங்கிரஸ் கட்சியில் நான் அப்படித்தான் நடத்தப்பட்டேன். என்னை பயன்படுத்தி கொண்டனர்" என்று கட்சியில் இருந்து விலகும் போது தெரிவித்து இருந்தார். சித்திக்கின் மகன் ஜீஷன், காங்கிரஸ் கட்சியில் பாந்த்ரா தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தார். ஆனால் கடந்த ஆகஸ்ட் மாதம், அவர் விதிகளை மீறியதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மும்பையில் பாந்த்ரா பாய் என்று அழைக்கும் சித்திக், ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் போன்ற ஏராளமான திரைப்பட நட்சத்திரங்கள் கொண்டாட வரும் பெரிய இப்தார் விருந்துகளில் பிரபலமானவர்.


ஷாருக்கானும் சல்மான் கானும் மீண்டும் நண்பர்களாக மாறியதற்காக சித்திக் கொண்டாடப்பட்டார். 2008-ல் அவர்களுக்குள் பெரிய வாக்குவாதம் ஏற்பட்டு முக்கியமான நிகழ்வுகளில் ஒருவரை ஒருவர் பார்ப்பதை நிறுத்தினர். ஆனால் 2013 ஆம் ஆண்டில், சித்திக் ரமழானுக்காக ஒரு சிறப்பு விருந்து ஒன்றை நடத்தினார், ஷாருக் மற்றும் சல்மான் ஆகிய இரு நட்சத்திரங்களும் அதற்கு வந்தனர். நீண்ட நாட்கள் பேசாமல் இருந்த அவர்கள் ஒருவரையொருவர் கட்டித்தழுவிக்கொண்டனர். இதன் மூலம் ஐந்தாண்டுகளாக நீடித்த சண்டை முடிவுக்கு வந்தது. சித்திக் திரைப்படங்களில் அதிகம் பணியாற்றவில்லை என்றாலும், இரண்டு பெரிய திரைப்பட நட்சத்திரங்களை தன்னால் ஒன்றிணைக்க முடியும் என்பதைக் காட்டினார், அவரை பொழுதுபோக்கு உலகில் முக்கியமானவராக ஆக்கினார்.


மேலும் படிக்க | ஒடிசாவில் ஏற்பட்ட அதே பிரச்சனை திருவள்ளூர் ரயில் விபத்துக்கு காரணமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ