பாரத் பயோடெக் தாயாரித்து வரும் நாசி தடுப்பூசி கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய மைல் கல்லாக இருக்கும் என  எய்ம்ஸ் மூத்த தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சஞ்சய் ராய் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட மருந்து தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக்கிற்கு, மூக்கு வழியாக செலுத்தப்படும் கோவிட்-19 தடுப்பூசியை (Intranasal COVID Vaccine) பூஸ்டர் டோஸாக பயன்படுத்துவதற்கான மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 


தில்லியைச் சேர்ந்த அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (AIIMS) மூத்த தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சஞ்சய் ராய், இந்தத் தடுப்பூசி மருத்துவப் பரிசோதனைகளில் மியூகோசல் என்னும் சளியை தடுக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை அளித்தால், அது பெரிய வெற்றியாக இருக்கும் என்று கூறினார். 


ALSO READ | Red Wine Vs Corona Virus: ஒயின் பிரியர்களுக்கு ஓர் நற்செய்தி!


AIIMS-ன் மூத்த தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சஞ்சய் ராய் செய்தி நிறுவனமான ANI அளித்த பேட்டியில், இந்த தடுப்பூசி சளியை தடுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கினால், அது மனிதகுலத்திற்கு ஒரு பெரிய சாதனையாக இருக்கும். உலகளவில் 33 தடுப்பூசிகள் உள்ளன என்றாலும்,  அவை நோய் தாக்கினால், தீவிரமடையாமல் இருக்க பெரிதும் உதவுகிறது என்றாலும், எதுவும் தொற்றுநோயைத் முற்றிலுமாக தடுப்பதில்லை.  இந்த தடுப்பூசி மியூகோசல் என்னும் சளி எதிர்ப்பு சக்தியை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்


எய்ம்ஸின் மூத்த தொற்றுநோயியல் நிபுணர் மேலும், கூறுகையில், மத்திய பட்ஜெட்டில் பொது சுகாதார அமைப்புகளை முதன்மை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நிலைகளில் வலுப்படுத்துவது தொடர்பான அறிவிப்புகள் இருக்க வேண்டும், ஏனெனில் இது மிகவும் முக்கியமானது. இது கடைசி தொற்றுநோய் அல்ல என்றார். எதிர்கால தொற்று நோய்களுக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். இதுமட்டுமின்றி, வரவிருக்கும் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க பொது சுகாதார அமைப்பை பலப்படுத்த வேண்டிய தேவை உள்ளது.


ஹைதராபாத்தில் பூஸ்டர் டோஸாக பாரத் பயோடெக்கின் மூக்கின் வழி செலுத்தப்படும் கோவிட்-19 தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனைக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு (DCGI) ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ஒன்பது வெவ்வேறு இடங்களில் சோதனை நடத்தப்படும். இந்த மாத தொடக்கத்தில், DCGI  நிபுணர் குழு (SEC) பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு அதன் இன்ட்ராநேசல் தடுப்பூசி (BBV154) சோதனைக்கு கொள்கையளவில் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | Health Tips: மன அழுத்தத்தை விரட்டும் 6 பழங்கள்.!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR