Red Wine Vs Corona Virus: ஒயின் பிரியர்களுக்கு ஓர் நற்செய்தி!

கொரோனா காலத்தில், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் போன்றோர் உணவுக்கும் தொற்று நோயை கட்டுப்படுத்தும் தன்மைக்கும் இடையிலான தொடர்பினை அறிய பல ஆய்வுகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 27, 2022, 06:25 PM IST
  • ரெட் ஒயின் கொரோனா அபாயத்தைக் குறைக்கிறது
  • ஆராய்ச்சி மூலம் வெளியான ஆச்சர்ய தகவல்
  • எனினும் பீர், ஆல்கஹால் தொற்று அபாயத்தை அதிகரிக்கலாம்.
Red Wine Vs Corona Virus: ஒயின் பிரியர்களுக்கு ஓர் நற்செய்தி! title=

Red Wine Vs Corona: கடந்த இரண்டு ஆண்டுகளாக, உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி வருகிறது. கொரோனா தொற்றைத் தவிர்ப்பதற்காக மக்கள் உணவில் இருந்து வாழ்க்கை முறை போன்றவற்றில் கவனமாக உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்தும் விஷயங்களை பற்றி அறிந்து கொள்வதிலும் ஆர்வமாக உள்ளனர்.

தற்போது கொரோனா காலத்தில் மதுபானம் குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் ரெட் ஒயின் அருந்துபவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் குறைவு என கண்டறியப்பட்டுள்ளது.

ரெட் ஒயின் நோய்த்தொற்றின் அபாயத்தை 17 சதவீதம் குறைக்கிறது என ஆய்வு கூறுகிறது. வாரத்திற்கு 5 அல்லது அதற்கு மேற்பட்ட க்ளாஸ் ரெட் ஒயின் குடிப்பதால், கொரோனா வைரஸ் தொற்றை தவிர்க்கும் அபாயம் 17 சதவீதம் குறையும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ALSO READ | பகீர் தகவல்! காற்று மாசுபாடு விந்தணு எண்ணிக்கையை குறைக்கிறதா..!!

பிரிட்டன் மக்களின் குடிப்பழக்கம் மற்றும் அவர்களில் உள்ள கொரோனா வரலாறு குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததாக பிரிட்டிஷ் இணையதளம் தெரிவித்துள்ளது. இதில் ரெட் ஒயினில் உள்ள பாலிஃபீனால் என்ற பொருள் காய்ச்சல் போன்றவற்றைத் தடுக்க உதவுகிறது. இதனால் கொரோனா தொற்று ஏற்படும் அபாயமும் குறைகிறது.  ஒயிட் ஒயின் மற்றும் ஷாம்பெயின் ஆகியவையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க உதவும் என ஆய்வு கூறுகிறது. வாரத்திற்கு 1 முதல் 4 கிளாஸ் ஒயிட் ஒயின் அல்லது ஷாம்பெயின் அருந்துபவர்கள், கோவிட் நோய்த்தொற்றின் அபாயத்தை 8 சதவீதம் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

ALSO READ | குடித்தால் கிளுகிளுப்பு; தடவினால் பளபளப்பு - வியக்க வைக்கும் 'Wine'

மது, பீர் குடிப்பது ஆபத்தாய் முடியும்

எனினும், பீர் மற்றும் ஒயின் குடிப்பவர்களுக்கு கொரோனா வருவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது.  பீர் மற்றும் ஆல்கஹால் உட்கொள்வது கோவிட் தொற்று அபாயத்தை 28 சதவீதம் அதிகரிக்கிறது என ஆய்வு கூறுகிறது. மருத்துவர்கள் கூட மது போன்றவற்றை உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | Sperm Donation: விந்தணு தானம் குறித்து ‘அறியாத’ தகவல்கள்..!!!

ALSO READ | Omicron: ஒமிக்ரானில் இருந்து காக்கும் ‘5’ எளிய ஆயுர்வேத நடைமுறைகள்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News