நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஓபன் ஸ்கூலிங் 10 மற்றும் 12 வது தேர்வு முடிவுகள் வெளியானது!
சிபிஎஸ்இ-க்கு முன்பு, தேசிய திறந்த பள்ளி நிறுவனம் 10 மற்றும் 12 வது தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
புது டெல்லி: நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஓபன் ஸ்கூலிங் (NIOS) பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டது. சிபிஎஸ்இ-க்கு முன்பு, தேசிய திறந்த பள்ளி நிறுவனம் 10 மற்றும் 12 வது தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில், 90.64 சதவீத மாணவர்கள் 10 ஆம் வகுப்பிலும், 79.21 சதவீத மாணவர்கள் 12 ஆம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேசிய திறந்த பள்ளி நிறுவனம் (National Institute of Open Schooling) கீழ், இம்முறை 10 வது தேர்வுக்கு ஒரு லட்சம் 18 ஆயிரம் 869 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். அதில் ஒரு லட்சத்து ஏழாயிரம், 745 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மறுபுறம், 12 ஆம் வகுப்பு தேர்ச்சியை பார்த்தால், இந்த ஆண்டு 12 ஆம் வகுப்பில் ஒரு லட்சம் 69 ஆயிரம் 748 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். அதில் ஒரு லட்சம் 34 ஆயிரம் 466 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
NIOS தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் "தேசிய திறந்தநிலை கல்வி நிறுவனம் (NIOS) இரண்டாம்நிலை பாடநெறி (10 ஆம் வகுப்பு) மற்றும் மூத்த இடைநிலை பாடநெறியின் (12 ஆம் வகுப்பு) தேர்வு முடிவுகளை வெளியிட்டது. தேர்வு முடிவுகளை https://results.nios.ac.in. என்ற வலைத்தளம் மூலம் தெரிந்துக்கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் தேர்வு முடிவுகள் நகலை பதிவிறக்கம் செய்துக்கொள்ளவும் அறிவுறுத்தி உள்ளது.
NIOS வகுப்பு 10 மற்றும் 12 ஜூன் தேர்வுகளின் மாணவர்கள் தங்கள் பதிவு எண்ணைப் பயன்படுத்தி ஆன்லைனில் results.nios.ac.in இல் தங்கள் முடிவுகளை சரிபார்க்கலாம்.
NIOS 10, 12 ஜூன் முடிவுகளை எவ்வாறு சரிபார்க்கலாம் 2021:
- Result.nios.ac.in இல் அதிகாரப்பூர்வ முடிவு வலைத்தளத்திற்கு செல்லவும்.
- முகப்புப்பக்கத்தில், NIOS முடிவுகள் சரிபார்ப்பு என்பதைக் கிளிக் செய்க
- தற்போது திரையில் ஒரு புதிய பக்கம் தோன்றும்
- உங்கள் Enrollment Number இட்டு லாகின் செய்யவும்
- NIOS 10, 12 வது முடிவுகள் 2021 திரையில் காண்பிக்கப்படும்
- முடிவுகளைப் பதிவிறக்கி அதன் அச்சுப்பொறியை எதிர்கால பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR