புதுடெல்லி: மகாராஷ்டிராவில் (Maharashtra) அரசு அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி (Nationalist Congress Party) தலைவர் சரத் பவார் (Sharad Pawar) இன்று பிரதமர் நரேந்திர மோடியை (Narendra Modi)  சந்திக்க உள்ளார். இருப்பினும், இந்த சந்திப்பு மகாராஷ்டிராவில் விவசாயிகளின் நிலைமைகள் குறித்த ஆலோசனையாக இருக்கும் எனத் தெரிகிறது. நமக்கு கிடைத்த தகவலின்படி, சரத்பவர் மற்றும் பிரதமர் மோடி இடையே இன்று மதியம் 12:40 மணிக்கு சந்திப்பு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சிவசேனா எம்.பி.க்களும் கலந்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி என்சிபி கட்சியை பாராட்டினார் என்பதை எங்களுக்குத் நினைவுப் படுத்துகிறோம். பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் சரத் பவாரின் கட்சியான என்.சி.பியை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியிருந்தார். அதாவது, கடந்த 18 ஆம் தேதி மாநிலங்களவையின் 250வது அமர்வு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி (Prime Minister Narendra Modi) இரண்டு முறை என்.சி.பி. (தேசியவாத காங்கிரஸ் கட்சி) கட்சியை புகழ்ந்து பேசியுள்ளார். 


அதாவது பி.ஜே.டி (Biju Janata Dal) மற்றும் என்.சி.பி ஆகிய கட்சிகள் சபையில் ஒழுக்கத்தை பேணுகின்றன என்று அவர் கூறினார். இரு கட்சிகளும் மற்ற கட்சிகளை, தரம் தாழ்த்தி பேசுவதோ அல்லது சபையின் முன்னுக்கு வந்து கூச்சல் போடுவதோ போன்ற செயல்களை செய்யக்கூடாது என்று முடிவு செய்து, அதை செயல்படுத்தின. இதனால் இந்த இரு கட்சிகளின் அரசியல் வளர்ச்சி பயணத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இவ்வாறு இரு கட்சிகளுக்கும் ஒரு உதாரணம் கொடுத்து, 'பாஜகவும் பிற கட்சிகளும் இவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். பிரதமர் மோடி NCP கட்சியை பாராட்டு இருப்பது, மகாராஷ்டிராவின் சமீபத்திய அரசியலுடன் தொடர்புஇருப்பதாக விமர்சனர்கள் தெரிவித்தனர்.


அதேபோல கடந்த 18 ஆம் தேதி மகாராஷ்டிராவின் அரசியல் நிலைமை குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு பேசிய என்சிபி தலைவர் சரத் பவார், மகாராஷ்டிராவின் அரசியல் நிலைமை குறித்து மட்டும் சோனியா காந்திஇடம் விவாதித்ததாகவும், மகாராஷ்டிராவில் அரசாங்கம் அமைப்பது குறித்து எந்த ஆலோசனையும் செய்யப்பட வில்லை என்று பவார் தெளிவுபடுத்தினார். காங்கிரஸ் மற்றும் என்.சி.பி தூதுக்குழுவில் இடம் பெற்றுள்ள தலைவர்கள் மாநிலத்தில் அரசாங்கத்தை அமைப்பது குறித்து பேசுவார்கள் எனக் கூறியிருந்தார். மேலும் அவர் மாநிலத்தின் நிலைமை குறித்து சோனியா காந்தி விளக்கமளித்தேன்" என்று ஷரத் பவார் கூறினார்.


"யாருடன் செல்வது என்று பேசுவதில் பயனில்லை. எங்கள் கூட்டணி கட்சிகளுடன் பேச வேண்டியிருக்கும். சிவசேனாவில் எத்தனை எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்பது எனக்குத் தெரியாது. அவர்களிடம் கேளுங்கள். நாங்கள் அனைவருடன் இருக்கிறோம். எங்கள் கட்சியின் கொள்கையை நாங்கள் மட்டுமே தீர்மானிப்போம். யாருடன் செல்ல வேண்டும் என்பதை நாங்கள் மட்டும் தான் தீர்மானிப்போம்.


மாநிலங்களவையில் என்.சி.பியைப் பாராட்டிய பிரதமர் மோடி குறித்து கேள்விக்கு, பாராளுமன்ற சபையின் கவுரத்தை கவனித்துக்கொள்வது முக்கியம். இது எங்கள் கொள்கை. நாங்கள் பாஜகவுக்கு எதிராக மட்டுமே தேர்தலில் போராடினோம்.


சரத் பவார் மேலும் கூறுகையில், "பொதுவான குறைந்தபட்ச திட்டம் மற்றும் பிற சிறு கட்சிகள் கேட்கப்பட்டன. சிவசேனா தனது சொந்த முடிவுகளை எடுத்து வருகிறது. எங்களிடம் 54 எம்.எல்.ஏ கட்சி மட்டுமே உள்ளது, இப்போது, நாங்களும் காங்கிரசும் ஒன்றாக இருக்கிறோம், வேறு யாரும் இல்லை எனத் தெளிவாக கூறினார். 


முன்னதாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க எந்தவொரு கட்சியும் இதுவரை தேவையான பெரும்பான்மையை ஆளுநரிடம் முன்வைக்க முடியவில்லை. இதனால் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமுல் படுத்தப்பட்டுள்ளது. பாஜகவுடன் உறவை முறித்துக்கொண்ட சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருகிறது. ஆனாலும் இதுவரை, அந்த முயற்சி முழுமை அடையவில்லை. 


தேர்தலுக்கு முந்தைய நட்பு கட்சிகளா பாஜக-வும், சிவசேனாவும் அக்டோபர் 21 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டன. 288 இடங்களில் பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் வென்றது. இருப்பினும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சுழற்சி முதலமைச்சர் பதவியைக் கோரியதைத் தொடர்ந்து கூட்டணி பிரிந்தது.  மறுபுறம், மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் முறையே 44 மற்றும் 54 இடங்களை வென்றன. ஆனால் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாதபட்சத்தில் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமுல் படுத்தப்பட்டுள்ளது.