NEET Exam Date Announced: மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி நடத்தப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா வைரஸ் (Coronavirus) காரணமாக இந்த தேர்வு தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது செப்டம்பர் 12 ஆம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என இன்று அறிவிப்பு வந்துள்ளது.


நீட் தேர்வு (NEET Exam) எழுத விரும்பும் மாணவர்கள் நாளை மாலை 5 மணி முதல் nta.ac.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். இது குறித்து அவர் ட்வீட் செய்துள்ளார்.




ALSO READ: JEE Main தேர்வுகள் குறித்து முக்கிய அறிவிப்பு: தேசிய தேர்வு முகமை


நீட் (NEET) தேர்வு நடக்கும் நகரங்கள் முன்னர் 155 ஆக இருந்த நிலையில், கொரோனா பெருந்தொற்று அச்சம் காரணமாக, தற்போது இது 198 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  அதேபோல் நீட் தேர்வு நடக்கும் மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நீட் தேர்வுகள் மொத்தம் 3862 மையங்களில் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு இந்த மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


அனைத்து வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், கொரோனா தொற்று பரவல் தடுப்பு விதிமுறைகளும் பின்பற்றப்பட்டு தேர்வு நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.


இதற்கிடையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழக குடும்ப நல மற்றும் சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன், மாணவர்கள் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று கூறினார். தமிழக மாணவர்களுக்கு தொடர்ந்து அரசு நீட் தேர்வு பயிற்சியும் அளித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். 


நாளை நீட் தேர்வு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றது. நீதிமன்ற முடிவுக்குப் பிறகு தமிழக அரசின் தெளிவான முடிவு பற்றி தெரிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 


ALSO READ: AK Rajan NEET குழு நியமனம் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு மாறானதா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR