புதுடெல்லி: ஜூலை மற்றும் ஆகஸ்ட் 2022 க்கு இடையில் தேசிய தேர்வு முகமை (எண்டிஏ) நடத்தும் எந்தவொரு போட்டித் தேர்வுகளுக்கும் அட்டவணையில் மாற்றம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எண்டிஏ பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு-UG (CUET-UG) , மருத்துவம் மற்றும் அதுசார்ந்த படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு-யுஜி (NEET-UG) மற்றும் பொறியியல் மற்றும் கட்டிடக்கலை படிப்புகளுக்கான கூட்டு நுழைவுத் தேர்வு-முதன்மை (JEE-main) ஆகிய மூன்று பெரிய நுழைவுத் தேர்வுகளை நடத்துகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு பிரிவினர் இந்த தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி வருகின்றனர். NEET-UG 2021 -ன் கல்வி ஆண்டின் கவுன்சலிங் மற்றும் துவக்கத்தில் ஏற்பட்ட தாமதம், தேர்வுக்கு தயாராவதற்கு போதுமான நேரம் இல்லாமை ஆகியவற்றை காரணம் காட்டி தெர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. 


ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 10 வரை நடத்தப்படும் CUET-UG-க்கான தேதிகளை எண்டிஏ கடந்த வாரம் அறிவித்தது. நீட்-யுஜி ஜூலை 17 மற்றும் ஜெஇஇ மெயின்ஸ் தேர்வு ஜூலை 21 முதல் ஜூலை 30 வரை திட்டமிடப்பட்டுள்ளது. CUET க்கு, 9.5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களும், நீட் தேர்வுக்கு 18.72 லட்சம் மாணவர்களும் பதிவு செய்துள்ளனர்.


மேலும் படிக்க | NEET PG 2022: முதுகலை நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின 


கல்வி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளின் கூற்றுப்படி, மூன்று தேர்வுகளில் எதுவும் மாற்றியமைக்கப்படாது. 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கோவிட் தொற்று காரணமாக பலமுறை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இதனால் கல்வி ஆண்டு அமர்வுகள் மோசமாக பாதிக்கப்படுகின்றன. இந்த முறை மறுசீரமைப்பிற்கு அத்தகைய காரணம் எதுவும் இல்லை என்றும், அனைத்து கல்வி நிறுவனங்களும், கல்வி ஆண்டு அமர்வுகள் மற்றும் செயல்முறைகளை கோவிட் தொற்றுக்கு முந்தைய காலத்திற்கு ஏற்ப மீண்டும் கொண்டு வரும் முயற்சியில் உள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


சமூக ஊடகங்களில் மாணவர்கள் மூன்று தேர்வுகளையும், குறிப்பாக NEET-UG மற்றும் CUET ஆகியவற்றை ஒத்திவைக்கக் கோரி வருகின்றனர். CUET தேர்வுகளின் தேதிகள் வெளியானது முதல், இந்த தேர்வுகளை ஒத்தி வைப்பதற்கான கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன. 


ஒரு மாணவர் ட்வீட் செய்து, “ஐயா தயவுசெய்து க்யூட் (ug) 2022 ஐ ஒத்திவைப்பதற்கான எங்கள் கோரிக்கையை பரிசீலிக்கவும். நாங்கள் எங்கள் 12வது பொதுத் தேர்வுகளை சில நாட்களுக்கு முன்புதான் முடித்தோம். பொதுத் தேர்வுகளுக்கு நீக்கப்பட்ட பல பாடங்களை நாங்கள் இப்போது இந்த தேர்வுகளுக்கு படிக்க வேண்டும். பொதுத் தேர்வு மற்றும் மொழிப் பாடங்களுக்கும் தயாராக வேண்டும். தேர்வுக்கு தயார் ஆக எங்களுக்கு நேரம் தேவை. இது எங்களின் தாழ்மையான வேண்டுகோள்,” என தெரிவித்திருந்தார். நீட் தேர்வை ஒத்திவைக்க, “போஸ்ட்போன் நீட்” இரண்டு மாதங்களுக்கும் மேலாக சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது.


ஒத்திவைப்பு பற்றிய வதந்திகளுக்கு செவிசாய்க்க வேண்டாம் என்று மாணவர்களை கேட்டுக்கொண்ட மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர், “தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறுகின்றன. கடந்த இரண்டு கல்வி அமர்வுகள் ஏற்கனவே பல்வேறு காரணங்களுக்காக பல வித அவநம்பிக்கைகளை ஏற்படுத்தியது. நாங்கள் அதை மீண்டும் பாதையில் கொண்டு வர முயற்சிக்கிறோம். சரியான நேரத்தில் தேர்வுகளை நடத்தினால் மட்டுமே அது நடக்கும். எந்தவொரு வதந்திகள் அல்லது தனியார் பயிற்சி நிறுவனங்களின் எந்தவொரு ஒத்திவைப்பு உறுதிகளையும் நம்பி மாணவர்கள் தவறாக வழிநடத்தப்படக்கூடாது.” என்று தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | G7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மன் பயணம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR