EXAM vs FEAR: திட்டமிட்டால் தேர்வும் நம் வசமே! கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு பயமின்றி தயாராக வேண்டும் என்று தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேட்டுக் கொண்டார்

Last Updated : Apr 14, 2022, 01:09 PM IST
EXAM vs FEAR: திட்டமிட்டால் தேர்வும் நம் வசமே! கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி title=

சென்னை: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பயப்படாமல் தேர்வுக்கு திட்டமிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டுக் கொண்டார்.

சென்னை தியாகராய நகரில் தமிழ்நாடு செய்தி வாசிப்பாளர் சார்பில் செய்தி வாசிப்பாளர்கள் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டு செய்தி வாசிப்பாளர்கள் பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு பயம் இருக்க கூடாது என்பதற்காக திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டினார்.

CM STALIN

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 35 சதவீதம் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பாடத்திட்டம் குறைத்தால் மாணவர்கள் போட்டித்தேர்வுக்கு தயாரவதில் சிக்கல் ஏற்படும்.

எனவே மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு பயமின்றி தயாராக வேண்டும்  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளியில் மதமாற்றம் புகார் எழுந்துள்ளது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு. அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும் படிக்க | நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது யார் ஆட்சியில்

உற்சாகத்துடன் பொதுத் தேர்வுக்கு திட்டமிட சரியான தருணம் இதுதான். கல்வியாண்டுக்கான பாடத்திட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டு நிறைவு பெற்றிருக்கும் இந்த சமயத்தில் ஒவ்வொரு பாடத்திற்கும் போதுமான நேரத்தை ஒதுக்கீடு செய்து படிப்பதும், படித்ததை எழுதிப் பார்ப்பதும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற உதவியாக இருக்கும். 

அதற்காக எப்போதும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. அது மன இறுக்கத்தை ஏற்படுத்தும், எனவே படிப்பதற்கு இடையில் கட்டாயம் ஓய்வு அவசியம். படிப்பதற்காக திட்டமிட்டு அட்டவணை தயாரிக்கும்போது படித்த பாடங்களுக்கு குறைவான நேரத்தை ஒதுக்கி ரிவிஷன் செய்தால் போதும். 

தேர்வுக்கு இருக்கும் காலத்தை சரிபாதியாக பிரித்து, இதுவரை நன்றாகப் படிக்காத மற்றும் முக்கியமாக படிக்க வேண்டிய பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிப்பது என்பது திட்டமிடுதலில் மிகவும் முக்கியமானது.  

மேலும் படிக்க | 3 மாணவர்கள் பலி - 83 நாட்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட பள்ளி

தேர்வுக்கு இன்னும் எத்தனை நாட்கள் இருக்கிறது, ஒவ்வொரு பாடத்திலும் எவ்வளவு பக்கங்கள் இருக்கின்றன என்பதை கணக்கிட்டு திட்டமிடவேண்டும். அதில் குறைந்தது ஐந்து நாட்களை கழித்துக் கொள்ள வேண்டும். 

தேர்வுக்கு 5 நாட்கள் முன்னதாக அனைத்து பாடங்களையும் படித்து முடிக்குமாறு திட்டமிட வேண்டும். அதுதான், சரியான திட்டமிடல்.

ஒவ்வொரு வாரத்திற்கும் எவ்வளவு பகுதிகளை படித்து முடிக்க வேண்டும் என்பதையும், தினசரி எவ்வளவு பாடங்களை திருப்புதல் செய்ய வேண்டும் என்பதை கணக்கிட்டு திட்டமிடுவது நல்ல மதிப்பெண்களை கொடுப்பதோடு, தேர்வு அச்சத்தையும் போக்கும்.

மேலும் படிக்க | Whatsapp-ல் இந்த அம்சங்கள் கூட இருக்கா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News