பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது சிறந்தது: மெகபூபா முப்தி!
பாகிஸ்தானுடனான பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தையே சிறந்தது என்று ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுடனான பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தையே ஒரே வழி என்று ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் இரண்டு நாட்களில் அடுத்தடுத்து இரண்டு தாக்குதல் நடைபெற்றுள்ள நிலையில், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஜம்மு காஷ்மீர் முதல் மந்திரி மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அம்மாநில முதல் மந்திரி மெகபூபா முப்தி கூறியதாவது:- மாநிலத்தில் ஏற்படும் இரத்தக்கறைக்கு பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை தவிர வேறு எந்த வழியும் இல்லை.
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து நாம் பேசவில்லை என்றால் வேறு யார் பேசுவார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக போரிட்ட எல்லா போரிலும் இந்தியா வெற்றி பெற்று உள்ளது. அப்படியிருந்த போதும் கூட, பேச்சுவார்த்தை நடத்துவதை தவிர வேறு எந்த வழியும் தற்போது இல்லை” என்றார்.