IC 814 The Kandahar Hijack: சமீபத்தில் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் 'IC 814: தி காந்தஹார் ஹைஜாக்' என்ற வெப்சீரிஸ் வெளியானது. வெளியான சில நாட்களில் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு இதனை தீவிரமாக எடுத்து கொண்டு நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. "இந்த நாட்டு மக்களின் உணர்வுகளுடன் விளையாட யாருக்கும் உரிமை இல்லை. இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் நாகரீகம் எப்போதும் மதிக்கப்பட வேண்டும். எதையாவது தவறாக சித்தரிக்கும் முன் சிந்திக்க வேண்டும். மத்திய அரசு அதை மிகவும் தீவிரமாக எடுத்து கொண்டுள்ளது" என்று இந்த வெப் சீரிஸ் தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு: யாத்திரைக்கு சென்ற பக்தர்களுக்கு பாதிப்பு - 2 பெண்கள் உயிரிழப்பு


பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான ஹர்கத்-உல்-முஜாஹிதீன் 1999ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை கடத்தியதை மையமாக வைத்து இந்த வெப்சீரிஸ் உருவாகி உள்ளது. இந்நிலையில் இந்த வெப் சீரிஸ் வெளியான சில நாட்களில் இந்தியாவின் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி பிரதிநிதி மோனிகா ஷெர்கிலை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த வெப் சீரிஸை பார்த்த பலரும் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். கடத்தல்காரர்களின் பெயர்களை 'போலா' மற்றும் 'சங்கர்' என்று வேண்டுமென்றே மாற்றியதாக குற்றம் சாட்டி வருகின்றனர். 


IC 814: தி காந்தஹார் ஹைஜாக்


'IC 814: தி காந்தஹார் ஹைஜாக்' வெப் சீரிஸை அனுபவ சின்ஹா ​​மற்றும் த்ரிஷாந்த் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் உருவாக்கி உள்ளனர். விமானத்தின் கேப்டன் தேவி சரண் மற்றும் பத்திரிகையாளர் ஸ்ரீஞ்சோய் சௌத்ரி எழுதிய, 'ஃப்ளைட் இன்டூ ஃபியர்: தி கேப்டனின் கதை' என்ற புத்தகத்தில் இருந்து இந்த கதையை உருவாக்கி உள்ளனர். நசிருதீன் ஷா, விஜய் வர்மா, பங்கஜ் கபூர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



வெப் சீரிஸின் உண்மை கதை என்ன?


1999ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 191 பயணிகளுடன் நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து புறப்பட்டு டெல்லி நோக்கிச் சென்றது. இந்த விமானம் கிளம்பிய சில நிமிடங்களில் பயணிகள் போல் விமானத்தில் இருந்த கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டது. உடனடியாக விமானத்தை அவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த அவர்கள், ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தஹாருக்கு விமானத்தை கொண்டு செல்ல திட்டமிட்டனர். அதற்கு முன்பு அமிர்தசரஸ், லாகூர் மற்றும் துபாய் ஆகிய இடங்களில் தரையிறங்கி சென்றது. இந்திய சிறையில் உள்ள மசூத் அசார், அகமது உமர் சயீத் ஷேக் மற்றும் முஷ்டாக் அகமது சர்கார் ஆகிய மூன்று பயங்கரவாதிகளை விடுவித்தால் தான் பயணிகளை விடுவிப்போம் என்று கடத்தல்காரர்கள் தெரிவித்தனர்.


அந்த சமயத்தில் இந்தியாவின் பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய், பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர அவர்களை விடுவிப்பதாக ஒப்புக்கொண்டார். பின்னர் அவர்கள் தலிபான் உதவியுடன் பாகிஸ்தானுக்கு தப்பி சென்றனர். பின்னர் 2000ம் ஆண்டு வெளியான மத்திய உள்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, விமானத்தில் இருந்த கடத்தல்காரர்களின் பெயர்கள் இப்ராஹிம் அதர், ஷாஹித் அக்தர் சயீத், சன்னி அகமது காசி, மிஸ்திரி ஜாகூர் இப்ராஹிம் மற்றும் ஷகிர் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் விமானத்தில் இருக்கும் போது அவர்கள் உண்மையான பெயரை சொல்லி அழைத்து  கொள்ளவில்லை. சீப், டாக்டர், பர்கர், போலா, ஷங்கர் என்று பேசி கொண்டனர் என்று உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் கூறப்பட்டது.


மேலும் படிக்க | இந்த ஆவணம் இருந்தால் வெளிநாடு செல்ல பாஸ்போர்ட், விசா தேவையில்லை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ