பாஸ்போர்ட் சேவா மூலம் வழங்கப்பட்டு வந்த சேவைகள், தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த வாரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அந்த சமயத்தில் அப்பாயின்ட்மென்ட் கொடுக்கப்பட்டவர்களுக்கு மாற்று தேதிகளில் வருமாறு அறிவுறுத்தப்பட்டது. தற்போது செப்டம்பர் 1 இரவு 7:00 மணி முதல் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பழையபடி பாஸ்போர்ட் தொடர்பான அனைத்து வேலைகளுக்கும் இதனை மீண்டும் பயன்படுத்தலாம். முன்னதாக, ஆகஸ்ட் 29 அன்று இரவு 8:00 மணி முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு பாஸ்போர்ட் சேவா போர்டல் மூடப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் (MEA) தெரிவித்து இருந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததை விட விரைவாக வேலை முடிந்ததால் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த பாஸ்போர்ட் சேவை இல்லை என்றால் மக்களால் புதிய நியமனங்களைச் செய்ய முடியாது, அதே போல ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் மாற்றம் செய்யப்படும்.
மேலும் படிக்க | UPI பேமெண்ட்... இந்த தவறுகளை செஞ்சுடாதீங்க... பின்னாடி வருத்தப்படுவீங்க
சீமன் ஆவணம் (Seaman Book)
பிற நாடுகளுக்குச் செல்ல பாஸ்போர்ட் மற்றும் விசா போன்ற ஆவணங்கள் அடிப்படை தேவை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் சீமன் ஆவணம் (Seaman Book) என்று அழைக்கப்படும் மற்றொரு சிறப்பு ஆவணம் இருந்தால் உங்களால் பயணம் செய்ய முடியும் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்த ஆவணம் பாஸ்போர்ட் போன்றது, ஒரு சில பயணிகள் மட்டும் விமான நிலையத்தில் விசா இல்லாமல் இந்த ஆவணத்தை பயன்படுத்தி பயணம் செய்ய முடியும். மாலுமிகள், கப்பல் தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் போன்ற கப்பல்களில் பணிபுரியும் நபர்களுக்கு இந்த சீமன் ஆவணம் (Seaman Book) ஒரு சிறப்பு அடையாள அட்டை போன்றது. இது விமானம் அல்லது படகு மூலம் பல்வேறு நாடுகளுக்குச் செல்ல உதவுகிறது. இந்த ஆவணம் எல்லோருக்கும் கிடைக்காது.
கடலில் வேலை செய்பவர்கள் மட்டுமே சீமன் ஆவணம் (Seaman Book) வைத்திருக்க முடியும். எப்படி பயணம் செய்ய பாஸ்போர்ட் தேவையோ, அதே போல இந்த தொழிலாளர்களுக்கும் கடலில் இருக்கும்போது தாங்கள் யார் என்பதைக் காட்ட சீமன் ஆவணம் (Seaman Book) தேவை. இந்த ஆவணம் கப்பல்களில் வேலை செய்பவர்களுக்கு ஒரு சிறப்பு அடையாள அட்டை போன்றது. அதில் அவர்களின் பெயர், பிறந்த நாள் மற்றும் அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் போன்ற முக்கியமான தகவல்கள் இடம் பெற்று இருக்கும். பணியாளர்களின் கல்வி தகுதி, கப்பலில் என்ன வேலை செய்கிறார்கள், பணிபுரியும் கப்பலின் பெயர், பயணம் எவ்வளவு நேரம் இருக்கும் போன்ற விவரங்களும் இதில் இருக்கும். பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் சர்வதேச கப்பல்களில் பணிபுரியும் போது பணியாளர்களுக்கு உதவுகிறது. மேலும் இது வெளிநாட்டு துறைமுகங்களில் குடியேற்ற செயல்முறையை எளிதாக்குகிறது.
இதனை விமான நிலையங்களில் எப்படி பயன்படுத்துவது?
விமான நிலையத்தில் பணிபுரியும் ஒரு மூத்த அதிகாரி கூறுகையில், மற்ற நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் போது, வேலைக்கு செல்லும் போது அல்லது மருத்துவ அவசரத்திற்காக விமானத்தில் செல்லும் போது அனைவரும் பாஸ்போர்ட் மற்றும் விசாவை வைத்திருக்க வேண்டும். ஆனால் சொகுசு கப்பல், சரக்கு கப்பல், வணிகக் கடற்படை போன்ற கப்பல்களில் பணிபுரிந்தால், கப்பலில் வேலைக்குச் செல்லும்போது பாஸ்போர்ட்டுக்குப் பதிலாக இந்த சீமன் ஆவணத்தைப் (Seaman Book) பயன்படுத்தலாம். இருப்பினும், நீங்கள் விமான நிலையத்தில் பயணம் செய்யும் முன், மாலுமிகளுக்கான ஐடி கடல்வழி அடையாள ஆவணம் எனப்படும் வெளியேற்றச் சான்றிதழையும் (CDC) சமர்ப்பிக்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ