New Parliament: மக்களவையில் நிறுவப்பட்டது செங்கோல்... புதிய நாடாளுமன்ற கல்வெட்டை திறந்துவைத்த பிரதமர்!
New Parliament Inauguration: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் கல்வெட்டை திறந்துவைத்த பிரதமர் மோடி, மக்களவையில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே செங்கோலையும் நிறுவினார்.
New Parliament Inauguration: டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடம் இன்று திறக்கப்படுகிறது. ரூ. 971 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டடத்தை பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார். தொடக்க விழாவில் ஒருபகுதியாக இன்று காலையில் பூஜைகள் நடைபெற்றன. காலை 7 மணியளவில் புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தார். பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் பூஜைகளை ஏற்றனர்.
ஆதீனங்களிடம் ஆசிர்வாதம்
தொடர்ந்து, புதிய நாடாளுமன்றத்தின் கல்வெட்டையும் பிரதமர் மோடி திறந்துவைத்தார். தமிழ்நாட்டின் திருவாடுதுறை ஆதீனத்தை சேர்ந்த அடியார்கள் செங்கோலை பிரதமர் மோடியிடம் கொடுத்தனர். மேலும், பிரதமர் மோடி ஆதீனங்களின் முன்னிலையில், செங்கோல் முன் நெடுஞ்சாண்கிடையாக கீழே விழுந்து வணங்கினார்.
மேலும், பல்வேறு ஆதீன அடியார்களிடம் பிரதமர் மோடி ஆசிர்வாதமும் பெற்றார். இந்நிகழ்வுகள் அனைத்தும், புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் வெளிப்புறத்தில் நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், அதிகாரிகள், பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க | புதிய நாடாளுமன்ற கட்டடம்: நீங்கள் கண்டிப்பாக அறிய வேண்டிய 10 தகவல்கள் இதோ!
மக்களவையில் செங்கோல்
தொடர்ந்து, ஆதீனங்களிடம் செங்கோலை பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி, மக்களவை அரங்குக்கு சென்றார். அவருடன் ஆதீன அடியார்கள், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோரும் சென்றனர். பின்னர், மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகே, செங்கோல் வைப்பதற்கான உருவாக்கப்பட்ட கண்ணாடி பெட்டியில், பிரதமர் மோடி செங்கோலை நிறுவினார். பின்னர், இருவரும் அவையில் குத்துவிளக்கை ஏற்றினார். 20க்கும் மேற்பட்ட ஆதீனங்களிடம் அவையிலும் பிரதமர் மோடி ஆசிபெற்றார்.
இதையடுத்து, புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்டிய கட்டட ஊழியர்களுக்கு நினைவுப் பரிசை பிரதமர் மோடி வழங்கினார். அதன்பின்னர், புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு வெளியே அமைக்கப்பட்ட மேடையில், இஸ்லாமியர், கிறிஸ்தவர் உள்ளிட்ட சர்வமத பிராத்தனைகள் நடத்தப்பட்டன.
இரண்டு பகுதிகளாக நடைபெறும் விழா
தொடர்ந்து, இரண்டு பகுதிகளாக இந்த திறப்பு விழா நடைபெறுகிறது. காலை 7 மணியளவில் தொடங்கிய இந்நிகழ்வு, பிரார்தனைகளுடன் காலை 9. 30 மணிக்கு நிறைவுபெறும். இதையடுத்து, 11.30 மணிக்கு விழா மீண்டும் தொடங்கும்.
12 மணியளவில் பிரதமர் மோடி மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வருகை தருவார். பிரதமர் மோடியின் உரையுடன் மதியம் 2 மணிக்கு திறப்பு விழா நிகழ்வுகள் நிறைவுபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | இனி என்னவாகும் பழைய நாடாளுமன்ற கட்டடம்? - முழு தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ