News Tidbits செப்டம்பர் 16: இன்றைய சில முக்கியமான செய்திகள்...
கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கோவிட் 19 க்கு 11,16,842 சோதனைகள் நடத்தப்பட்டன. தென்னிந்தியாவில் IS தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகரிப்பு...திடுக்கிடும் தகவல்
பீகார், தர்பங்காவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் போர் போன்ற நிலைமைகளை உருவாக்கினால், சிறந்த பயிற்சி பெற்ற, திறமையான துருப்புக்களை எதிர்கொள்ள நேரிடும் என்று இந்திய ராணுவம் சீனாவை எச்சரித்துள்ளது. கிழக்கு லடாக்கில் குளிர்காலத்தில் கூட முழு அளவிலான போரை நடத்த தனது படைகள் முழுமையாக தயார் நிலையில் உள்ளதாக இந்திய ராணுவம் சவால் விடுத்துள்ளது.
தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக, செஸ் நிதியில் இருந்து கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 5,000 கோடி நிதியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது
861.90 கோடி ரூபாய் செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டும் ஏல நடைமுறையில் டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட்டுக்கு (Tata Projects Limited) வெற்றி கிடைத்துள்ளது.
கோவிட் 19 தடுப்பூசி மருந்துகள் இரண்டின் முதலாம் கட்ட மருத்துவ பரிசோதனைகள், ஆக்கப்பூர்வமாக இருப்பதாக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறைத் இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபே மாநிலங்களவையில் தெரிவித்தார்.
அத்தியாவசிய பொருட்கள் (திருத்த) மசோதா 2020 நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றியுள்ளது மக்களவை.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR